பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 15

8. குறிப்பறிதல்

நுண் ணியார் முகத்தின் தோற்றம் விடார்; அவரைக் கண்டு அறிய வேண்டும் என்றது. .3

104. பகைமையுங்கேண்மையுங் கண்ணுரைக்குங்கண்ணின்

வகைமை யுணர்வார்ப் பெறின்.

(இ-ள்) ஒருவனோடுள்ள பகைமையும் நட்பையும் கண்கள் சொல்லும்; கண்ணினது வேறுபாட்டை யறிவாரைப் பெறின், (எ-று)

இது, கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க் கல்லது அரிதென்றது. 4.

705. குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு

ளென்ன பயத்தவோ கண்.

(இ-ள்) ஒருவன் முகக் குறிப்பினானே அவனவன் மனக் குறிப்பை யறிய மாட்டாவாயின், தன்னுறுப்புக்களுள் கண்கள் மற்றென்ன பயனைத் தருமோ? (எ-று).

இது, குறிப்பறியாதார் குருடரோடு ஒப்பரென்றது.

796. குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை

யுறுப்போ ரனையரால் வேறு.

(இ-ள்) நினைந்ததனைச் சொல்லாமைக் கொள்ளவல்லாரோடு மற்றையார் உறுப்பு ஒரு தன்மையர் அல்லது அறிவினால் வேற்றுமை யுடையர், (எ-று),

இது, குறிப்பறியாதார் அறிவில்லாதார் என்றது. 707. கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று

மாறா நீர் வையக் கணி. (இ-ள்) அரசன் மனநிகழ்ச்சியை அவன் கூறுவதன்முன்னே நோக்கி அறியுமவன், எல்லாநாளும் மாறாநீர் சூழ்ந்த வையத்துக்கு அணிகலனாவான், (எ-று).

இது மக்களிற் சிறப்புடையனா மென்றது.