பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

931

3. பொருள் செ

754. உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்.

(இ-ள்) தானே வந்துற்ற பொருளும், ஆயவற்கத்தால் வரும் பொருளும், தன் பகைவரை யடர்த்துக்கொண்ட பொருளும், அரச னுக்குப் பொருளாம், (எ-று. * | *

உறுபொருள்-காவற்ற பொருள் மேல் நியாயமாகத் தேட வேண்டும் என்றார்; இவை நியாயமோ எ ன் று ஐயுற்றார்க்கு அர சற் கு நியா யம் என்று கூறப்பட்டது. 4.

755. குன்றேறி யானைப்போர் கண்டற்ற சற் றன்கைத்தொன்

நறுண்டாகச் செய்வான் வினை.

(இ-ள்) குன்றின்மேலேயிருந்து, யானைப்போர் கண்டாற் போலு ம; தன் கையகதது ஒரு பொருளுண்டாகக் கொண்டு செய்யத் தொடங்கினவன் செய்யும் வினை, (எ-று).

பொருளுடையார்க்குத் தாம் வருத்தமுறாமல் பிறரை வினை செய்வாராகவே கண்டிருக்கலாமென்றது. 5

756. ஒண்பொருள் காழ்ப் வியற்றியார்க் கெண்பொரு

ளேனை யிரண்டு மொருங்கு.

(இ ஸ்) ஒள்ளிய பொருளை முற்ற உண்டாக்கினார்க்கு ஒழிந்த அவ்வறமும் காமமுமாகிய பொருளிரண்டும் (ஒருங்கே) எளிய பொருளாக வெய்தலாகும், (எ-று).

மேல் சில பொருளுடையார்க்குப் பொருள் எய்துதல் வருந் தாமை வரும் என்றார். இஃது அறமும் இன்பமும் எய்தலாமென் கூறிற்று.

757. அருளென் னு மன்வீன் குழவி பொருனென்னுஞ்

செல்வச் செவிலியா லுண்டு.

(இ-ள்) அறம் செய்தற்குக் காரணமாகிய அன்பினின்றும் தோற்றின அருளாகிய குழவி, பொருளாகிய நல்ல செவிலித்தாய் வளர்த்தலாலே உண்டாம் (எ-று).