பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277

8. பெண்வழிச் சேறல்

அச்சமில்லா ராயினும் சொன்னது செய்வராயின், இம்மூன்று பொருளும் எய்தார் என்றது

என்னை? தலைமை அவன் கண்ண கா கலான்

இவை மூன்றினானும் ஏவல் செய்தார்க்கு உளதாகும் குற்றம் கூறப்பட்டது.

908. மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார்

வேண்டாப் பொருளு மது.

(இ- ள்) மனையாளைக் காதலித் தொழுகுவார் நற்பயனைப் பெறார்; யாதானும் ஒருவினை யைச் செய்து முடிக்க வேண்டுவாள் விரும்பாத பொருளும் அவரை விழையாமையே. (எ-று).

இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி, அவர் தம்மையே காதலித்தொழுகுவார்க்கு அறனும் பொருளும் இல்லையா மென்றது. 8

909. பேணாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர்

தானாக தானுத் தரும்.

(இ-ஸ்) அறத்தினையும் பொருளினையும் பேணாது மனை பாளைக் காதலிப்பானது செல்வம், பெரியதோர் நாணம் உல

கத்தே நிற்கும் படியாகத், தனக்கு நாணினைத், தரும், (எ-று)

அவன் செல்வத்திற்குப் பயன் நாணமாய் முடியும்; என்னை? அச்செல்வம் அற்றால் பின்பு என்ன செய்வேம் என்று நாணுவனாத லின், பெரியதோர் நாணுதலாவது, இவன் காமத்தால் கெட்டான்

என்று உலகத்தார் அறிய நிற்பதோர் நாணம் உண்டாதல்.

சச் WT ந்தன் திறம் காண்க. 9.

910. எண் சேர்த்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை யில்.

(இ- ள்)

எண்ணஞ் சேர்ந்த மனத்தின் விரிவுஉடையார்க்கு எல்லாம் நாளும் பெண்ணைச் சார்ந்து

ஆம் அறிவின்மை இல்லை பாம். (எ-று) .