பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291

1 , குடிமை

குடிமையாவது உயர்குடிப் பிறந்தார் இயல்பு கூறுதல், மக்க வருடைத்தாகிய குணங்கள் எல்லாவற்றினும் உயர்குடிப்பிறத்தல் சிறப்புடைத்தாதலின் இது முற் கூறப்பட்டது.

9.51. நகையினக யின்சொ லிகழாமை நான்கின் வகையென்ப வாய்மைக் குடி க்கு.

(இ-ள் முகமலர்ச்சியும், கொடையும், இனியவை கூறுதலும் பிறரை இகழாமையுமாகிய நான்கினையும் மெய்ம்மையுடைய குலத் தினுள்ளார்க்கு அங்கமென்று சொல்லுவர், (எ-று).

தொகை என்பது பிண்டத்தின் பெயராதலின் வகை என்பது றப்பிற்கும் பெயராயிற்று. மெய்ம்மைக்குடி என்றதனானே எஞ் ஞான்றும் தப்பில்லாக்குடி என்று கொள்ளப்படும். இவை நான்

கினையும் தமக்கு உறுப்பாக உடையார் என்றும் கூறிற்று. 1

952. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்

செப்பமு நானு மொருங்கு.

(இ-ள்) உயர்குடிப் பிறநதார் மாட்டல்லது நடுவு நிலைமை யும், பழி நாணுதலும், இயல்பாக ஒருங்கு உண்டாகா, (எ-று) .

இஃது. இற்பிறந்தார் இவ்விரண்டும் இயல்பாக உடைய

ரென்றது. 2

953. ஒழுக்கமும் வாய்மைய நாணு மிம் மூன்று

மி ழக்கார் குடி ப் பிறந் தார்.

(இ-ள்) ஒழுக்க முடைமையும். மெய்ம்மை கூறுதலும், ற் றம் மறைத்தலாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றினையும் தப்பார் உயர்குடிப்பிறந்தார். (எ-று).

இவை மூன்றினையும் த பபியொழுகார் என்றது. 3

954. நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்

குலத்திற் பிறத்தார்வாய்ச் சொல்.

1. நான்கும்’ என்பது மணக். பாடம்.