பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295

2. மானம்

965. குன் றி னனை யாருங் குன்றுவர் குன்றுவ

குன்றி யனைய செயின்.

(இ-ன்) மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் த ம து தன்மை குறைவர்; குறைவு வருவன குன்றி அளவாயினும் செய் வாாாயின், (எ-று).

இது, மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது. இத்துணை யும் தன்மை மறைய ஒழுகுதல் ஆகாது என்று கூறப்பட்டது. 5

9 66. புகழின்றாற் புத்தேனாட் டுய்யாதா லென் மற்

றிகழ்வார்பின் சென்று நிலை.

(இ-ள்) இம்மைப் பயனாகிய புகழைத் தாராதாயின், மறு மைப் பயனாகிய சுவர்க்கத்துப் புகுதலில்லை ஆயின், தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது பின்னை என்ன பயனைக் கருதி ? (எ-று).

இது, தன்னை இகழ்வார் மாட்டுச் சென்று நிற்றலைத்தவிர்க வென்றது G

967. ஒட்டார்பின்சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே

கெட்டா னெனப்படுத னன்று.

(இ-ள்) ஒருவன் தன்னை இகழ்வராபின் சென்று வாழும் அவ்வாழ்க்கையின், அவர் பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படுதல் நன்று. (எ-று).

மேல் இம்மை மறுமையில் பயன்படாது என்றார்; அஃது காற்றுக்குப் பொருள் பயக்குமே என்றாற்குக் கூறப்பட்டது. இவை யிாண்டும் இகழ்வார்பால் சேறல் ஆகாது என்பது கூறிற்று. 7

968 மருந்தோமற் றானோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடழிய வந்த விடத்து.

(இ-ள்) தமது பெரிய தகைமை வலியழிய வந்தவிடத்துச் சா வாதே இருந்து உயிரோம்பி வாழும் வாழ்க்கை பின்பும் ஒருகாலஞ் சாவா மைக்கு மருந்தாமோ, (எ-று).