பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:303

5. பண்புடைமை

992, எண்ாதத்தா லொ த லெளிதென்ய யார்மாட்டும்

பண் புடைமை யென்னும் வழக்கு.

(இ- ள்) யாவர் மாட்டும் எளிய காலத்தை உடையவன் . ப்துதல் எளிது என்று சொல்லுவர், பண்புடைமை என்று வழங்கப்

படுகின்ற இதனை , (எ-று).

எளிய காலம் ஆவது, எல்லாரும் தத்தம் குறை சொல்லு தற்கு எளிய செவ்வி அஃதுடையார்க்குப் பண் புண்டாம் என்றது. இது பெரும்பான்மையும் அரசரை நோக்கிற்று, மேற்கூறிய வகை யே யன்றி இதனாலும் பண் புண் டாம் என்று கூறப்பட்டது. 2

993. நகையுள்ளு மின்னா திகழ்ச் சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.

(இ-ள்) அறிவார் மாட்டு நகையாடுதலின் கண்ணும் இகழ்ச்சி தோற்றுமாயின் இன்னாதாம்; பகையாகுமிடத்துப் பண்பு தோற்றுமாயின் பெருமை உளதாம், (எ-று).

எனவே, அறியாதா ர் மா ட்டு இவை இரண்டும் இல்லையாம் என்றவாறாயிற்று. இகழ்ச்சி என்றது பண்பின்மை இஃது அறி வுடையார் மாட்டு ஒரு தலையாகக் கொண்டு ஒழுக வேண்டும்

என்றது.

994. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்பு பா ராட்டு மு லகு.

( இ-ள்) பிறரால் விரும்பப் படுத லோடே கூட நன்னெறியின் கண்ணே பொருந்தின பொருளுடையாரது குணத்தினை உலகம் கொண் டாடும், (எ-று).

இவை, எல்லாரும் புகழ்வர் என்றது. 4.

995. பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேன்

மண்புக்கு மாய்வது மன்.