பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305

5. பண் புடைமை

999. உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் வெறுத்தக்க

பண்பொத்த லொப்பதா மொப்பு.

(இ-ஸ்) மக்கள் ஒப்பாவது உறுப்பு ஒத்தலன்று; செறியத் தக்க குணங்களை ஒத்தல்; அதனை ஒப்பதே ஒப்பாவது, (எ-று).

செறியத் தக்க குணங்கள் உளவாதலின் செறியத் தக்க குணம் என்றார். பண்பு இல்லாதார் மக்களல்லர் என்றது. 9

1000. அரம்போ லுங் கூர்மைய ரேனு மரம்போல் வர்

மக்கட்பண் பில்லா தவர்.

(இ-ள்) அரத்தை ஒத்த கூர்மையை உடையராயினும் மக்கட் பண்பு இல்லாத மாந்தர் மரத்தை ஒப்பர். (எ-று) .

அரம் போலும் தனக்குள்ள கூர்மை, பிறர் மாட்டு மடியாமை யும் தான் பிறரைக் கூரியர் ஆக்குதலும் ஆம், இஃது உணர்வுடை யார் ஆயினும் உணர்வில்லாத மரத்தை ஒப்பார் என்றது; என்னை? உணர் வால் பயன் இன்மையின், 10

6. நன்றியில் செல்வம்

நன்றியில் செல்வமாவது அறத்தையும் இன்பத்தையும் பயவாத செல்வத்தியல்பு கூறுதல். இது பண் பிலாதார்க் குளதாவதொன்றாதலின், அதன் பின் கூறப்பட்டது.

10 01. அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டி ய

வொண்பொருள் கொள் வார் பிறர்.

(இ-ள்) பொருள் தேடுங்கால் பிறர்மாட்டு அன்பு செய்தலை

யும் நீக்கி, அது தேடினான் நூகர்தலுமின்றி, அறத்தையுஞ் செய் யாது, தொகுத்த ஒள்ளிய பொருளைக் கொள்வார் பிறர். (எ-று).