பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

12. இரவச்சம்

106 3. ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்

கிரவி னினிவந்த தில்.

(இ-ள்) இப் பசுவிற்குத் தண்ணிர் தருமினென்று பிறரை இரப்பினும்; நாவிற்கு இரத்தல்போல் இளிவரவு தருவது பிறிது இல்லை, (எ-று).

இஃது. அறத்துக்காக இரத்தலும் ஆகா தென்றது. இவை முன்றினாலும் இரத்தலைத் தவிர வேணடும் என்று கூறப்பட்டது. 3

1064. இன்மை யிடும்பை யிரத்துதிர் வர மென்னும்

வன்மையின் வன்பாட்ட தில்.

(இ-ன்) வறுமையாலுற்ற துன்பத்தைப் பிறர் மாட்டு இரந்து பெற்ற பொருளினானே தீர்ப்பேமென்று கருதுகின்ற வன்மைபோல

பன் பாயிருப்பது பிறிது இல்லை. (எ-று).

இஃது, இரந்தாலும் நல்குரவு தீரா தென்றது. 4

1065. இரவென் னு மேமாப்பி றோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும்.

(இ-ள்) ஒருவன் வறுமையாகிய கடலை நீந்தி ஏறுவதாக அமைத்துக் கொண்ட இரத்தலாகிய அரணில்லாத தோணி இரக்கப் பட்டார் மாட்டுக் கசத்தலாகிய கல்லோடே தாக்கப் பிரிந்துவிடும், (எ-று)

இஃது, நல்குரவு தீராமைக்குக் காரணங் கூறிற்று. இவை இரண்டினானும் இரவினால் பயனின்மை கூறப்பட்டது. 5

10.66. இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள

வுள்ள தரஉ மின்றிக் கெடும்.

(இ-ள்) இரப்பமென்று நினைக்க உள்ளம் கரையும்; இரக்கப் பட்டவா கசக்கு மதனை நினைக்கக் கரைந்து நின்ற உள்ளம் மாய்ந்து கெடும். (எ-று) .

இஃது, இரப்பார்க்கு ஊக்கமில்லையாம் என்றது. o