பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.35

2. குறிப்பறிதல்

நெறியுள வால் எனின்? பிறவாற்றாற் கூடுங்கால். குாவரால் கூடில் பெருந்தினை யாம்; பொருள்கொடுத்துச்சாரின் அசுரமா ம வலியிற்சாரின் இசாக்கதமாம்; மறவியிற்சாரின் பசாசமாம்; ஆதலின் இக்கூட்டத்துக்குக் குறிப்பறிந்தே புணரவேண்டுதலின், இதுகூறப் பட்டது. மேலதனோடியைபும் இது. இது தலைமகற் குரித்தன்றோ வெனின் அவன் வெளிப்பட இரத்தலான் வேண்டா வென்க.

1991 இருநோக் கிவளுண்க ாைள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

(இ-ள்) இவள் உண் கண்ணிலுள்ள நோக்கம் இ ர ண் டு வகைத்து, அவ்விரு வகையினும் ஒருநோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம், (எ-று).

நோய்நோக்கென்பது முதல் நோக்கின நோக்கம்; மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங் கலங்கி நானோடுகூடி நோக்கின நோக்கம். இது நான முடைய பெண்டிரது உள்ளக் கருத்து வெளிப்படுமாறு கூறியது, 1

1092 நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ள.தவள்

யாப்பினு ளட்டிய நீர்.

(இ-ள்) முற்பட நோக்கினாள், நோக்கின பின்பு நாணினாள், அஃது அவள் நட்புப் பயிர் வளர அதன் கண் வார்த்தநீர் (எ-று)

நாண் போகாமைக்குக் காரணாங் கூறியவாறாயிற்று பந்தம் என்பதனையாப்பு என்று கூறினார், பார்த்தவள் பெயராது நாணி நிற்றலும் உடன்படுதலாம் என்றது. - 2

1093, யானோக்குங் காலை நிலனோக்கு தோக்காக்காற்

நானோக்கி மெல்ல நகும்.

(இ-ள்) யான் தன்னைப் பார்க்குங்கால், தான் நிலத்தைப் பார்க்கும்; யான் பாராத காலத்துத் தான் பார்த்தது தோன்றாமல் நகும், (எ-று).