பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

2. குறிப்பறிதல்

மேல் தலைமகள் கூறிய கடுஞ்சொல்லும் அதன் பின் கடுத்து நோக்கின நோக்கமும் குறித்து இவ்வாறு செய்யினும் அன்பின்மை தோற்ற நில்லாமையின், உடன்பாடென்று தேறியது. 9

1 100. கண்ணொடு கண்ணிணை தோக்கொக்கின் வாய்ச்சொற்க

னென்ன பயனு மில

(இ-ள்) கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின், வாயினாற் கூறுஞ் சொற்கள் ஒரு பயனு (புடைய வல்ல, (எ-று).

இது, சார்தலுறுகின்ற த ைல ம க ன் தன்நெஞ்சிற்குச் சொல்லியது. 10

3. புணர்ச்சி மகிழ்தல்

புணர்ச்சி மகிழ்தலாவது தலைமகள் குறிப்பறிந்து புணர்ந்த தலைமகன் புணர்ச்சியினை மகிழ்ந்து கூறுதல், மேலதனோடியைபு மிது. இது தலைமகட்கு உரித்தன்றோவெனின், அவட்கும் ஒக்கு மாயினும் அவள் மாட்டுக் குறிப்பினான் நிகழின் அல்லது கூற்றினான் நிகழாதென்க.

1 101. பிணிக்கு மருந்து பிற ம னணியிழை

தன்னோய்க்குத் தானே மருந்து .

( இ-ள்) நோயுற்றால் அதற்கு மருந்தாவது பிறிதொன்று: இவ்வணியிழையால், வந்த நோய்க்குக் காரணமாகிய இ வ. ள் தானே மருந்தாயினன். (எ-று).