பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339

3. புணர்ச்சி மகிழ்தல்

இது, புணர்வத முன்னின்ற வே ட் ைக தணிந்தமை கூறிற்று. 1

1102. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறிய, மைம்புலனு

மொண்டொடி கண்ணே யுள.

  • +.

(இ-ள்) கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலனும், இவ்வொள்ளிய தொடியை யுடையாள் மாட்டே யுள , (எ. று).

இது, பொறிகள் ஐந்தினுக்கும் ஒருகாலத்தே யின்பம் பயந்த தென்று புணர்ச்சியை வியந்து கூறியது. 2

1103. தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா

லம்மா வரிவை முயக்கு.

(இ-ள்) தம்மிடத்தேயிருந்து, த மது தாளாண்மையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும்; அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம், (எ-று).

உணவினும் அதனின் மிக்க இன்பம் தருவதில்லை; புணர்ச்சி யின் இதனின் மிக்க இன்பம் தருவதில்லை என்று அதன் இனிமை கூறியது. 3

1104. தாம்வீழ்வார் மென்றே சட் டுயிலி னினிதுகொ

றாமரைக் கண்ணா னுலகு.

(இ-ஸ்) தாம் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின் கண் துயிலுத்துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம், (எ-று).

சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது. 4.

1105. வேட்ட பொழுதி ன ைவயவை போலுமே

தோட்டாழ் கதுப்பினா டோன்.

(இ-ள்) காதலித்தபொழுது காதலிக்கப்பட்ட அ வ் வ ப் பொருள்களைப் போலும்; தோளின்கண் தாழ்ந்த கூந்தலினை யுடையவள் தோள், (எ-று).