பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அலரறிவுறுத்தல்

1141 கண்டது மன்னு மொருநா ள லர்மன்னுந்

திங்களைப் பாம்புகொண் டற்று.

(இ-ள்) யான் கண்ணுற்றது, ஒரு ஞான்று; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற் போல, எல்லா ரானும் அறியப்பட்டு

அ லரா கா நின்றது, (எ- று) .

காப்புக்கைம்மிகப் பட்ட தலைமகள் வேறுபாடு கண்டு, செவிலி முதலாயினார் உற்று நோக்கிய குறிப்பைத் தலைமகள் கொண்டு, ஒரு நாளைக் காட்சியே அலர் ஆகா.நின்றது’ என்று தோழிக்குக் கூறியது. *

1142. ஊரவர் கெளவை யெருவாக வன்னை சொன்

iைராக நீளுமிந் நோய்.

(இ-ள்) ஊரார் எடுத்து அலர் எருவாக, அன்னை சொல்லும் சொல்லைத் தண்ணிராக, இந்நோய் வளராநின்றது. (எ-று).

இஃது, அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவை யிரண்டிற்கும் வரைவு கடாவுதல் பயன். 2

1143. அலர் நாண லொல்வதோ வஞ்சலோம் யென்றார்

பலர்தாண நீத்தக் கடை.

(இ.ஸ்) அலராகுமென்று நாணுதல் இயல்வதோ? அஞ்சு தலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கின விடத்து (எ-று).

பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை: தலை மகனைக் காணும் பொழுதில் காணாப் பொழுது பெரிதாதலால், தான் ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, ‘ நினது ஆற்றாமை அலராகின்றது ‘ என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. o

1144. தாம்வேண்டி நல்குவர் காதலர் யாம்வேண்டும்’

கெளவை யெடுத்ததிள் ஆர்.

1 . வேண்டிற்’ என்பது மணக் பாடம்.