பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.54

7. அலரறிவுறுத்தல்

(இ-ள்) யாம் விரும்பும் அலரை இவ்வூரார் எடுத்தார்; ஆத லான், இனித் தாங்களே விரும்பிக் கொடுப்பார் நமது காதலர்க்கு (எ- று) .

வரைவெதிர் கொள்ளாது தமர் மறுத்துழி ஆற்றாளாய தலை மகட்கு, இப்புணர்ச்சியை அயலார் துாற்றா நின்றார்; ஆதலால் குரவர் தாமே விரும்பிக் கொடுப்பர்’ என்று தோழி தலைமகளை ஆற்றுவித்தது. யா ம் வேண்டும் கவ்வை: இவனுககு நாம் பெண்டிர் ஆனது புறத்தார் அறியவேனும் என்று நினைத்திருந்தவாறாம். 4

1145. மலரன்ன கண்ண எருமை யறியா

தலரெமக் கீந்த திவ் ஆர்.

(இ- ள்) பூவொத்த கண்ணானது இற்பிறப்பின் அருமையை யறிய தே. இவ்வூர வர் எங்கட்கு அலரைத் தந்தார். (எ-று) .

எளியா ரைச் சொல்லு மாறு போலச் சொல்லா நின்றாரென்ற வாறு ஆயிற்று. தமது புணர்ச்சி அலராயிற்று என்று தோழி

கூறியது. 5

1146. களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்

வெளிப்படுத் தோறு மினிது .

( இ-ள்) மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற் போலக் கா மமும் அலராகுந்தோறும் இனிதாகும். (எ-று) .

இஃது, அலரறிவுறுத்த தோழியை நோக்கி, ‘துமக்குத் துன்பமாயிற்றே S( “ ரென்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது. வெளிப்படுந்தோறும் இனிது என்றது விரைந்து வெளிப் படுதல் குறிப்பு. 5.

1147. உறச.அதோ ஆரறிந்த கெளவை யதனைப்

பெறா அது பெற்றன்ன நீர்த்து.

(இ-ள்) ஊரறிந்த அலர் வருவதொன்றன்றே? அலரைத் திதாகக் கொள்ளாது. பெறாததொன்றைப் பெற்றாலொத்த நீர்மை தாகக் கொள்ளப்படும், எ-று) .