பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

3. கண் விதுப்பழிதல்

(இ-ள்) முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள் இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உண ராவாய்த், துன்பமுழப்பது எற்றுக்கு? (எ-று).

இது, கண்ணினறியாமையைத் தோழிக்குக் கூறியது.

1174. கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழு

மிது நகத் தக்க துடைத்து.

(இ-ள்) இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி, இன்று தாமே கலுழா நின்ற இது சிரிக்கத்தக்க துடைத்து, (எ-று).

இஃது, ஆற்றாமையால் நக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென னை யென்று வினாவியதோழிக்க க் கூறியது. 4.

11.75. மறைபெற லுரரார்க் கசிதன்றா லெம் பயோ

லறையறை கண்ணா ரகத்து.

(இ-ள்) எம்மைப்போல அறையறையாகிய கண்ணையுடை யார் மாட்டு உளதாகிய மறையை யறிதல் ஊரார்க்கு எளிது, (எ-று).

வரையாது பிரியப்பட்ட தலைமகள், என் கண்ணினாே இவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாகா நின்றது; அதற்கு யாங்ஙனம் செய்வேம்’ என்று தோழிக்குக் கூறியது. 5

11. 6. ஒஒ வினிதே யெமக்கிந்நோய் செய்த கண்

டாஅ மிதற் பட் டது.

(இ-ள்) எமக்கு இந்நோயைச் செய்த கண் தாமும் இந் நோயகத்துப் பட்டது மிகவும் இனிது, (எ- று) .

இது, நின்கண் கலங்கிற்று: அஃதெனக்கு இன்னாதாயிற்று’ என்ற தோழிக்கு, அதுமிகவும் இனிது’ என்று தலைமகள் கூறியது. 6

1177 உழத்துழந் துண்ணி ர றுக விழைந்திழைந்து

வேண்டி மாவார்க்கண்ட கண்.