பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

369

5. தனிப்படர்மிகுதி

தனிப் படர்மிகுதிய ாவது தனிமையான் வந்த துன்ப மிகுதி கூறுதல். யாம் பசப்பால் வருந்துகின்றாற்போல அ வ ரு ம் வருந்துவார் எ னின் இப்புணர்ச்சியிடையறாமல் இனிது நடக்கு மென்று நினைத்துத் தனது துன்பத்தினைக் கூறுதலான், அதன்

பின் இது கூறப்பட்டது.

1191 பருவ ர லும் பைதலுங் காணான் கொல் காம

னொருவர்க ணின்றொழுகு வான்.

( இ-ள்) நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் கானாதான் ஒருவர் பக்கமாக நின்று ஒழுகித் துன்பஞ் செய்கின்ற காமதேவன் காண்பானாயின், நம்மை வருத்தானே; தெய்வ

மாகலான், (எ-று).

சேய்மைக்கண் பிரிதலேயன்றி அணுமைக்கண் பிரியும் பிரிவும் உள. அவை யாவன: அவைக்களனும் மாசவையும் அத்தாணியும் புகுதவும், நல்லிசை நயந்து வந்தோர் காணவும். பனை நிலைப்புரவி காணவும், வாரியுள் யானை காணவும், நாட்டகத்துப் பிரியும் பிரிவும். அவற்றுள் யாதானும் ஒன்றனால் தலைமகன் பிரிந்துழி ஆற்றா ளாகிய தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சேய்மைக்கண் பிரிந்தானாயின் பருவம் காணின் அல்லது இக் கூற்றினால் பய னில்லை. பரத்தையிற் பிரிவா யின் புலவிதோன்றும். ஆதலான் அணு மைக்கண் பிரிந்தானைப்பற்றிக் கூறப்பட்டது என்று கொள்ளப் படும், இவ்வுரை மேல்வருவன வற்றிற்கும் ஒக்கும். 1.

1 192. தாம் வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கணி.

( இ-ள்) தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற வர் பெற்றாராவர், காமநுகர்ச்சியின் கண் பரலில்லாதோர் பழம்

(எ-று) .