பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

8. பொழுதுகண் டிரங்கல்

(இ-ள்) பொழுதே! நீ தட்பமுடையை யன்மையான், மாலை அல்லை; முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்ப தொருவேலா

குவை, (எ-று).

கெடுவாயாக என்னுதல் குறிப்புமொழி. இ து, மாலைப் பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது. 1

1222. மாலைநோய் செய்தன் மணத்தா ரகலாத

காலை யறிந்த திலேன்.

(இ-ள்) மாலைப்பொழுது நோய் செய்தலை, என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன்; அறிந்தேனா வின், அது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன். (எ-று).

இது, மாலையாலே வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது. 2

1223. அழல்போலு மாலைக்குத் துரதா கி யாயன்

குழல்போலுங் கொல்லும் படை.

(இ-ள்) நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதுக்கு முன்பு தூதுமாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வர வல்லது ஆயன் ஊதுங்குழலோ? (எ-று).

அவர் பிரிவதன் முன் இன்பம் நுகர்தற்குக் காலம் பார்த்திருந் துழி. மாலை வருகின்றதென்று துதாய் வருதலின் தூது என்றார். இப்பொழுது வருத்துதலின், படை என்றாள். அழல்போலும் மாலை என்றது பிரிந்த காலத்துக் கொடுமை செய்தலான் அதற்குக் குணமாகக் கூறினாள். இது மாலையொ டு வந்த குழலும் கொடி தென்று கூறியது. 3

1224. காலைக்குச் செய்ததன் றென்கொ லெவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை.

1. கால மறிந்த’ என்பது மணக். பாடம்.