பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.2

8. பொழுதுகண்டிரங்கல்

1228. காதல் ரில்வழி மாலை கொலைக்களத்

தேதிலர் போல வரும்.

( இ-ள்) காதலரில்லாதவிடத்து இம்மாலைப் பொழுது

கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும், (எ-று) .

இது, மாலைக்காலத்து நோய் மிகுதலென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங் கூறியது. 8

1229. பதிமருண்டு பை த லுழக்கு மதிமருண்டு

மாலை படர் தரும் போழ்து

(இ-ள்) எ ன் ம ன ன் நிலைகலங்கித் துன்பமுறா நிற்கும்; மயக்கத்தை யுடைத்தாகி மாலைக்காலம் வரும் காலம் இப்ப்தி யெல்லாம் மயங்கித் துன்ப முறா நிற்கும், (எ-று).

மதி என்பதனை முன்னே கூட்டுக. மதி-மனம். அறிவில்லா தாரைப் போல மயங்குதல் தக்கதன்று; நமக்கு ஆற்றியிருத்தல் கடன் என்ற தோழிக்குத், ‘தன் குறிப்பின்றியும் இம்மாலையைக் கண்ட பொழுதே என்மனம் மயங்கும், என்று தலைமகள் கூறியது. 9

1230. பனியரும்பிப் பைதல்கொண் மாலை துணியரும்பித்

துன்பம் வளர வரும்.

(இ-ள்) நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது, இன்றும் எனக்கு வெறுப்

புத்தோற்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது, (எ-று) .

இது, மு ன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள்

பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது. 1 ()