பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

9. உறுப்புநலனழிதல்

கருவியைக் கருத்தாவாக கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனது தோள் வாட்ட முற்றது கண்ட தோழிக்குச் சொல் வியது.

1234. பணை நீங்கப் பைந்தொடி சோருந் துணை நீங்கத்

தொல் கவின் வாடிய தோன் .

( இ-ள்) துணைவர் நீங்குதலானே பழைய அழகு இமுத்த தோள்கள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடா

நின்றன, (எ-று) .

பசுத்த வளை-மரகதத்தினாற் செய்த வளை. (தோள்) வாடு தலே யன்றி மெலிவதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலை மகள் சொல்லியது,

1235. கொடியார் கொடுமை யுரைக்குத் தொடியொடு

தொல் கவின் வாடி ய தோள்.

(இ-ள்) கொடியாரது கொடுமையைச் சொல்லா நின்றன, வளையோடு கூடப் பழைய வாகிய அழகினை யிழந்த தோள்களும்

(எ-று

தலைமகள் கூறிய சொற்கேட்டு, ‘யான் முன்பே தோள் கண்டு அறிந்தேன் அவர் கொடிய ராதலை’ என்று தலைமக ளாற்றுதற் பொருட்டுத் தலைமகனை யியற்பழித்துத் தோழி கூறியது

1236. தொடி யொடு தேரைெ கிழ நோவ லவரைக்

கொடிய ரெனக்கூற னொந்து .

(இ-ஸ்) வளையோடே தோள்கள் பண்டு போல் இறுகாது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்; நீ அவரைக் கொடியரென்று சொ ல்லுகின்றதற்கு நொந்து, (எ-று)

இஃது, ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றுவலென்பது படத் தலைமகள் சொல்லியது. 6

123 7. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோ ட் பூச லுரைத்து