பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

387

10. நெஞ்சொடுகிளத்தல்

(இ-ள்) மேன்மேல் நம்மோடு செறியாராய்த் துறந்து போன வரை நெஞ்சகத்தே யுடையேமாயின், முன்னம் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்; ஆதலான் மறத்தலே கருமம், (எ-று) .

ஈண்டு நெஞ்சென்றது மனத்தினுடையதானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது. 2

=

1243. காத லவசில ராகநீ நோவது

பேதைமை வாழியென் னெஞ்சு.

(இ-ள்) அவர் நம்மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத்தைக்கருதி வருந்துகின்றது பேதைமை, (எ-று).

இஃது, அன்பிலார் மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது. 3

1244. இருந்துள்ளி யென் பரித னெஞ்சே பரிந்துள்ள ல்

பைய்தனோ செய்தார்க ணில்.

(இ-ள்) நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து, அவர்வரவை நினைந்து வருத்துகின்றது யாதினுக்கு? வருத்தமுற்று நினைத்தல் நமக்குச் சிறுமைசெய்யும் நோயைத் தந்தார் மாட்டு இல்லையாயின் (எ-று).

இது, வாளாது வருந்துகின்றாயென்று கூறியது. 4.

1245. கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்

பொய்க்காய்வு காய் தியென் னெஞ்சு.

(இ-ள்) காதலர் கொடுமையை உட்பட்டு அறிந்து வைத்தும், அவரைக்கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை; இப்

பொழுது பொய்யே காயா நின்றாய் நெஞ்சே (எ-று).

இது, கண்டால் புலக்க மாட்டாத நீ கானாவிடத்து வெறுக்கின்றது எற்றுக்கு?, என்று கூறியது. காட்சி-கனவின் கண்கண்ட காட்சி போலும். முன்பு ஒரு காலத்துப் பிரிந்த தலைமகனைக் கண்ட காட்சி எனினும் அமையும், 5