பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

12. பொறையுடைமை

158. ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் 1 புகழ்.

(இ-ள்) ஒறுத்தவர்க்கு அற்றை நாளை யின்பமே உள்ளது; பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புக்ழுண்டாம், (எ-று).

இது, புகழுண்டாமென்றது. 8.

159. உண்ணுது நோற் பார் பெரியர் பிறர் சொல்லு

மின்னுச்சொ குேற் பாரிற் பின்.

(இ-ள்) உண்ணுது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; அவர் பெரியராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின், (எ- று) .

இது, தவம் பண்ணுவாரினும் பெரியரென்றது. 9

160. தறந்தாரிற் றரய்மை யுடைய சிறந்தார்வா

பின்னுச்சொ ைேற்கிற் பவர்.

(இ-ள்) மிகையாகச் சொல்லும் தீச்சொல்லப் பொறுக்குமவர், துறந்தவர்களைப் போலத் துய்மை யுடையர், (எ-று).

இது பற்றறத் துறந்தாரோ டொப்பரென்றது. 10

==

13. அழுக்காருமை

அழுக்காருமையாவது பிறராக்க முதலாயின கண்டு பொரு மையில்ை வருகின்ற மனக்கோட்டத்தைச் செய்யாமை. இதுவும் பொருமையா ன் வருவதொன்றாதலின் பிந் கூ ற ப் ப ட் ட து. அன்றியும் கடிய வேண்டுவன சொல்லுகின்றாராதலின் அதன் பிற் கூறப் பட்டதெனினுமமையும். இவ்வுரை இனிவருவன வற்றிற்கு மொக்கும்.

1. துணையும்” என்பது மனக்குடவர் பாடம்.