பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?

18. ஒப்புரவறிதல்

21 ?. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமரட்

டென் னாற்றுங் கொல்லோ வுலகு.

(இ-ள்) ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச்செய்ய வேண்டா; எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ? (எ-று

கடப்பாடு-ஒப்புரவு. ஒப்புரவாவது கைம்மாறு கருதாத கொடையென்று கூறிற்று. 2

213. இடனில் பருவந்து மொப்புரவிற் கொல்கார்

கடனறி காட்சி யவர்.

(இ-ள்) செல்வம் விரிவற்ற காலத்தினும் ஒப்புரவிற்குத் தளரார், ஒப்புரவை யறியும் அறிவுடையோர், (எ-று)

இது, செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது. 3

214. நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயனிர்மை

செய்யா தமைகலா வாறு.

(இ-ள்) நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாமையாலே (எ-று)

இது, செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது. 4

215. ஒப்புரவி னான் வருங் கேடெணி ன..தொருவன்

விற்றுக்கோ டக்க துடைத்து

(இ-ள்) ஒருவன் ஒப்புரவு செய்ததனானே பொருட்கேடு வந்ததென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகக் கொள்ளப் படாது; அஃது ஒன்றை விற்று ஒன்றை கொள்கின்றவாணிக மாகக்கொள்ளுந் தகுதியுடைத்து, (எ-று).