பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

(இ-ள்) படை கையிற்கொண்டவர்கள் நெஞ்சுபோல், நன் மையை நினையாது; ஒன்றினுடலைச் சுவைப்படவுண்டார் மன்ம்,

(எ-று).

மேல் ஊனுண் பார் அருளாளுதற்கு வேறு நெறியில்லை என் றார்க்கு அஃது உண்டானும் உயிர்க்கு அருள் செய்வனாயின் அருளுண்டாகாதோ என்றார்க்கு கூறப்பட்டது. 4

255. தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்

விலைப்பொருட்டா லூன்றருவா ரில்.

(இ-ள்) தின ற்காக உலகத்தார் கொல்லார்களாகில் விலைக் காக ஊன்விற்பாரும் இல்லை, (எ-று).

இது, கொன்று தின்னாது விலைக்குக்கொள்வார்க்குக் குற்ற மென்னை யென்றார்க்கு, அதனானுங் கொலைப்பாவம் வருமென்று கூறப்பட்டது.

256. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்

பொருளல்ல தவ்வூன் நினல். (இள்) அருளல்லாதது யாதெனின் , கொல்லாமையைச் சிதைத் தல்; பொருளல்லாதது, யாதெனின், அவ்வூனைத் தின்றல் (எறு).

கொல்லாமை கோறலைச் செய்நன்றி கொன்றான் என்றால் போலக் கொள்க. அன்றியும் அருளும் அருள் அல்லாததும் கொல்லா மையும் கோறலும் என்று பொருள் உரைப்பாருமுளர்.

இஃது அருள் கெடுதலேயன்றி அதனை யுண்டாற் பெறுவ தொரு பயனுமில்லை என்றது. உ ட ம் பு வளர்தல் பயனாயின் அதற்குப் பிறிது முணவுண்டாதலான். 6

257. செயரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா

ருயிரிற் றலைப்பிரிந்த ஆன்.

(இ~ள்) குற்றத்தினின்று நீ ங் கி ன தெளிவுடையார் உண் னார்; உயிரினின்று நீங்கின உடம்பை, (எ-று) .

இது, மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின், இதனைத் தெளிவுடையா ருண்ணாரென்றது. 7

1. கொல்லா மணக் பாடம்.