பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

3. தவம்

தவமாவது ஊணும் உறக்கமுங் குறைத்தலும், வெயிலும் பணி யும் தாங்கலும், தேவர்வழிபாடு முதலாயின மேற்கொண்டு முயறலும். இஃது இல்லறத்துக்கு முன்வைக் கற்பாலது அருளுடையார்க் கும் புலாலுண்ணாதார்க்கு மல்லது நடத்துதற்கருமையின் பிற் கூறப் பட்டது.

261. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா

ரவஞ்செய்வா ரரசையிற் பட்டு.

(இ-ள்) தங்கருமஞ் செய்வார் ஆவார் தவஞ் செய்வார்; அஃதல்லாத செய்வாரெல்லாம் ஆசை பிலே யக ப் பட்டு ப் பயனில் லாதன செய்கின்றார், (எ-று).

இது, தவம்பண்ண வேண்டுமென்றது. 1.

262. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்

மற்றை யவர்க டவம்.

(இ-ள்) துறந்தார்க்கு உணவு கொடுத்தலை வேண்டி மறந்

தாராயினரோ? இல்வாழ்வார் தவஞ் செய்தலை, (எ-று).

இது, தானத்தினும் தவம் மிகுதியுடைத்தென்றது. 2

263. தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை

ய..தில் லார்’ மேற்கொள்வத.

(இ-ள்) தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந் நல்வினையில்லாதார். அத்தவத்தை யேறட்டுக்கொள் வது பயனில்லையாம்.

இது, தீவினையுடையார்க்குத் தவம் வராது; வரினுந் தப்பு மென்றது. இத்துணையும் தவத்தின் விழுப்பம் கூறிற்று. 3

264. உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை

யற்றே தவத்திற் குரு.

1. யஃதிலார் ‘ என்பது மணக். பாடம்.