பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௩௪

முன்னுரை


பயன் செயல்! . . . மாறு கருத்து வேறு இருப்பின் வேறு இடத்திலேயே அது கூறுறுமாறு கூறுதலுறவேண்டும்! இந் நடைமுறைக்கொத்த நேரிய சான்றாண்மை சான்ற போக்கு, பாவலரேறு ஐயா அவர்களின் நடைமுறையாகவே உள்ளமையை, அவர் வகுத்துக் கொண்டாற்றியுள்ள உரைப்போக்கின் நெடுகலுங் கண்டுணரலாம்!

கருமைநிலையாகிய இருட்சி நிலையே (இருள்நிலை - இருட்டு நிலை) இருள்! இவ் இருள் - அறிவற்றவுணர்வாகிய மனமலட்டுத் தன்மையை அஃதாவது அறியாமையைக் குறித்தற்கெனவும் பொருள் விரிவாக்கம் எய்தியது! [இக் கருத்து வளர்ச்சிப் போக்கின் உண்மையை அறிவைக் குறித்துப் பொருள் விரிவெய்தி நின்ற "ஒளி" என்னும் சொல்லோடும் பொருத்திப் பார்த்து உணரலாகும். (ஒளிஅறிவு) மேலும், - ஒளிக்கருத்து அறிவுக்கருத்துக்கு விரிவடைந்து ஒளிர்கின்ற உண்மையை, ஒள்ளியர் (= அறிவிற் சிறந்தவர்) (714, ஒள்ளியவர் (487), ஒளியார் (714) என்றவாறான சொல் வகைப்பாடுகளாலும் . "ஒள்" என்னும் வேரடியினின்று முளைத்துக் கிளைத்த ஒள்+பு ஒட்பு > (ஒட்பு+ அம்) ஒட்பம் (= அறிவுடைமை) (404, 425), ஒள் ஒண்>ஒண்+மை: ஒண்மை ( = சிறந்த அறிவு (844 ஆகியனவாகிய ஒளி பொருந்திய அறிவைக் குறித்த இரு சொற்களாலும் தெள்ளிதின் உணரலாகும்!

இருள் என்பதற்கு மயக்கம் (மனமயக்கம் என்னும் பொருளும் உள்ளது! (காண்க: 575 அத்துடன் இருள் நிறைந்ததாகக் கற்பனை செய்து கொண்டு பின் நம்பிக்கையாகவே கடைக்கழகக்காலத்தில் சிலர் ஏற்று நின்ற நிரயத்தையுங் கூட நிரையம்>நிரயம் =நரகம் (சமற்.) இவ் இருள் என்னும் சொல் குறித்தது! இதனை "ஆர் இருள்" (2) என்றவாறு அடையடுத்து நிற்கும் கூட்டுச்சொல்லாலும், "இருள் சேர்ந்த இன்னாவுலகம்” (243) என்றவாறு தொடர்ப்பாட்டுச் சொல்லாலும் திருவள்ளுவர்பெருமான் சுட்டி நின்றார்!)

ஆக இருள் என்பது இருள் நிலவும் நிலையையும் - இருட்டுக் காலத்தையும் இருள்நிலைமையுடைய மனத்தன்மையாகிய மயக்கத்தையும் பின்னர் அறியாமையையும் சுட்டியவாறு பொருள் வளர்ச்சியாக்கங்களைப் பெற்று நீடியது! இம் மேற்சுட்டிய சொற்பொருள்வகையுள் ஒன்றாகிய "மயக்கம் என்னும் பொருட்பாட்டுக் கருத்தையே 5-ஆம் எண் குறளின் முதற்சொல்லாகிய "இருள்” என்பதற்கு உரையாசிரியர்களாகிய பெரும்பாலரும் எடுத்து நிறுத்தி முன்வைத்துள்ள நிலையில், நம் பாவலரேறு ஐயா அவர்களோ "அறியாமை" என்னும் தெளிவுப்பொருளையே மயக்கமற எடுத்துத்