திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
௮௯
-1
ஆ) வாலறிவன் -2
இ)மலர்மிசை ஏகினான் - 3
ஈ) வேண்டுதல் வேண்டாமை இலான் - 4
உ) இறைவன் - 5, 10
ஊ) ஐந்தவித்தான் (இறைவன்) - 6
எ) தனக்குவமை இல்லாதான் - 7
ஏ) அறவாழி அந்தணன் - 8
ஓ பற்றற்றான் (இறைவன்) - 350
2) ஆட்சித் தலைவரை அவர் ஆணாகக் கூறியது.
(எ-டு) :
அ) இறை . . , அவனை. (அரசனை) - 547
ஆ) இறைவற்கு (அரசனுக்கு) - 733
இ) இறைவன் (அரசன்) - 778
3) நீத்தாரைப் பலவிடங்களில் அவர் ஆண் பாலாராகவே உனரத்தது.
(எ-டு) ;
அ) ஓரைந்தும் காப்பான் -24
ஆ) ஐந்தவித்தான் (நீத்தார்) - 25
இ) வகை தெரிவான் - 27
ஈ) நீங்கியான் - 341
4) அனைத்து அறக் கூறுகளுக்குமுரியவள் ஆண் என்றே கூறியது.
(எ-டு) :
மாசிலன் (34), பொறுத்தான் (37), அஃதொருவன் (38), ஒருவனுக்கு (40) இல்வாழ்வான் (41), (42), (47), வாழ்பவன் (50), வருவிருந்து ஓம்புவான் (84). மிச்சில் மிசைவான் (85), பணிவுடையன், இன்சொலன் (95), காண்பான் (99), செய்ந்நன்றி கொன்ற மகற்கு (10), செப்பம் உடையவன் (112), அடங்கியான் (124), ஆற்றுவான் (130), அறனியலான் (147), முதலிய நூற்றுக்-