பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

219

அ - 2 - 3 - மக்கட்பேறு - 6


பெறாதிருத்தல், ஒரு தாழ்ச்சியும், பெருங் குறையுமாம் என்பதும் உலகியல் என்க.

- இதனை நூலாசிரியரே, முன் வந்து, உறுதி கூறுவதாக, இப்பாடல் அமைந்தது, இதன் கருத்துக்கு மேலும் வலிவும் பொலிவும் தரத் தக்கதாம் என்க.

4. இந்நூலின்கண் உள்ள இது போலும் பல பாக்கள் இதே தகுதியும் பயனும் பெறும் என்க. - இது, மக்கட் பேற்றின் தனிச்சிறப்பையும், உலகியல் தேவையையும் உணர்த்தியதாம் என்க.

கஉ

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழியிறங்காப்
பண்புடை மக்கள் பெறின். 62

பொருள் கோள் முறை :

பழியிறங்காப் பண்புடை மக்கள் பெறின்,
எழு பிறப்பும் தீயவை தீண்டா.

பொழிப்புரை: இகழ்ச்சியும் இழிவும் தரத்தக்க செயல்களைச் செய்து அதனால் பிறரால் பழிக்கப்படும் வகையில் விளங்கித் தோன்றாதவாறு, நல்ல பண்புள்ள (செயல்களைச் செய்யும்) பிள்ளைகளைப் பெற்றால், (அவர்களைப் பெற்ற) பெற்றோர்களுக்கும் (அவர்களைத் தொடர்ந்து) அடுத்தடுத்துத் தோன்றுகின்ற குடும்பப் பிறப்பு முறைகள் பலவற்றுக்கும், தீமை தரக்கூடிய இகழ்ச்சித் தாக்கங்கள் நேர்வதில்லை.

சில விளக்கக் குறிப்புகள்

1-அ) நூலாசிரியர் பிறவிக் கொள்கை உடையவர். உயிர்கள் தம்தம் வாழ்முறை விளைவுகளுக்கு ஏற்ப அடுத்தடுத்துப் பல பிறவிகளை எய்துகின்றன என்பதில் அழுத்தமான நம்பிக்கை உடையவர். அந் நம்பிக்கையை அவர் இந்நூலுள் பல இடங்களில் தெரிவித்துள்ளார்.

1-ஆ உயிர்கள் பல பிறவிகள் எய்துகின்றன என்று கருதுகிறாரே தவிர, அவை ஏழு பிறவிகள் மட்டுமே எடுப்பதாக நூலுள் எங்குமே அவர் கூறவில்லை.