பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

11


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 11

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்கு - - கொன்றாகும் ஆக்கம் தலை - 328 என்றவாறு கொல்லாமை அதிகாரத்தும், “அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்' ... 333

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்' -, 335

என்றவாறு நிலையாமை அதிகாரத்தும், நூலாசிரியர் கூறும் அறக்கூ றுகள், அவை இல்லறம் என்னும் பிரிவின்கண் கூறப்பெறுவனவதாயி னும், துறவறம் என்னும் பகுப்பின்கண் கூறப்பெறுவனவாயினும், பொதுமை நலம் கருதும் கருத்துகளையே உள்ளடக்கியிருப்பதை துணுகி ஆராயுமிடத்து, நூலாசிரியர் மன்பதை நலம் கருதும் பொதுவுணர்வையே அறம் என்னும் நல்லுணர்வின்கண் கூறுவதாகத் தெரிகிறது. அவ்வாறு தெரியவே ஆரிய தர்மத்தை இன்னும் வெளிப்படையாகக் கூறுவதானால் வர்ணாச்சிரம அதர்மத்தை அவர் கூறிடவில்லை என்பது உறுதியாகிறது.

இனி, அறத்துப்பால் என்று அவர் வகுத்துக்கொண்ட பாற்பகுப்புப் பிரிவில் மட்டுமன்று, அவர் அறத்தைக் கூறுவது, பொருட்பால், இன்பத்துப்பால் என்று பகுத்துக்கொண்ட பாற்பகுப்புகளிலும்கூட ஆங்காங்கே, அவர் கூறும் கருத்துகளில், அறவுணர்வையே அடிப்படையாகக் கூறுவது, ஆய்ந்து அணுகினார்க்குத் தெரியவரும் என்க. பொருட்பாலில், வேந்தர்க்குக் கூறும் கீழ்வரும் இலக்கணங்களாகும் குறட்பாக்களில், அவ்வரசன்,

'காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன் அல்லன் ஆகவும் -386 இன்சொலால் ஈத்தளிக்க வல்லான் ஆகவும் – 387 முறை செய்து (மக்களைக் காப்பாற்றுபவன் ஆகவும் -388

கொடை அளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையான் ஆகவும் – 390

இருத்தல் வேண்டும் என்பது பொதுமக்கள் நலம் கருதும் அறவுணர்வே யன்றோ?

'கல்வியை வலியுறுத்துகின்ற அதிகாரத்தும்கூட நூலாசிரியர், தமக்கும் பிறர்க்கும் நன்மை பயக்கின்ற இன்பம் தருகின்ற கல்வியே தேவை என்னும் பொருளில், - -

தாம் இன்புறுவது உலகுஇன் புறக்கண்டு - காமுறுவர் கற்றறிந் தார். . – 399