பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

280


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 280

அதிர்பட வருச்சனை அடியில் வீழ்தல்

மதுரநன் மொழியொடு மனம்மெய் துயராய்

உதிர்கநம் வினையென உண்டி ஏந்தினார். - இப்பாடலின் கண், விருந்தாக வந்த பெரியோரை அறவோரை ஓம்பியது கூறப்பெற்றுள்ளது. எனினும் வந்த விருந்தினரை வரவேற்று, இனியவுரை கூறுதலே முதற்கண் ஒருவர் செய்ய வேண்டுவது என்பதை உணர்த்த, நூலாசிரியர் இதைத் தொடர்ந்து கூறிய இனியவை கூறுதல் என்னும் அடுத்த அதிகாரத்தினை அமைத்துக் காட்டினார். அதனுள் 'முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம் இன்சொல் இனிது (93) கூறவேண்டிய முகமனே விருந்தோம்பலுக்கு முதற்கண் வேண்டுவது என்று கூறுவார்.

விருந்து ஒம்பும் பொதுவான நடைமுறைகளாகக் கீழ்வரும்

செயற்பாடுகள் சில நூல் பகுதிகளுள் குறிக்கப்பெறுகின்றன. வந்த விருந்தினரை,

1. இனிய முகமலர்ச்சியுடனும், கனிவுடனும் இன்சொல் கூறி

எதிர்கொண்டு வரவேற்றல், அவர்க்கு அன்புடன் கை, கால்கழுவ நீர் தரல். அவர் அமர இருக்கையிடல். அவர்க்கு உணவிடல். பருக நீர் தரல், வெற்றிலை - அடைகாய் ஈதல், அவர் ஒய்வு கொள்ளவோ, படுக்கவோ இடம் ஒதுக்கல். படுக்கை தரல். - -- * : , வந்தவர் வெளியேறுங்கால், அன்புடன் அவர் பின் சென்று, வாழ்த்தி, மீண்டும் வருமாறு முகமன் கூறி, அழைப்பு விடுத்து, வழியனுப்பிவைத்தல், . - ஆகிய முறைகளால் ஒம்புதல் இல்லறவியலின் பேரறமாகக் கருதப் பெறுகிறது. - . விருந்தோம்புதல் தொடர்பாக இலக்கியங்களுள்ளும் அறநூல்களுள்ளும் கூறப்பெறும் சொற்றொடர்களும் ஈண்டு கவனிக்கத்தக்கன.

அவை வருமாறு : . . . . .

விருந்தாடல் - விருந்தாகச் செல்லுதல்

விருந்தெதிர் கோடல்(அல்) விருந்தெதிர் கொள்ளல் - விருந்தை எதிர்சென்று முகமலர்ச்சியுடன் முகமன் கூறி வரவேற்றல், .