பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297 அ - 2 - 5 - விருந்தோம்பல் - 9 வீழ்த்துவதற்காக, ஆரியர்களும் அவரடிமைகளும் வலக்காரமாகச் செய்துகொண்ட வளமான, கற்பனைக் கட்டுக் கதைப்புகளே இவை யென்க.

தமிழியலின் தொன்மை நூலான தொல்காப்பியத்திலும் வானோர், தேவர், அமரர், அமுதம் முதலிய செய்திகள் வருகின்றன.

- மற்று, அகம், புறம், பரிபாடல், கலித்தொகை முதலிய நூல்களுள் சிலவாகவும், சிலப்பதிகாரம், மணிமேகலையுள் பலவாகவும், பரவலாகவும், ஏராளமாகவும் செய்திகள் கூறப்பெற்றுள்ளன. - இக் குறளுள் கூறப்பெறும், வானவர்க்கு நல்விருந்து ஆகின்ற செய்தி போலவே, புறநானூற்றில் 213ஆம் பாடலில், கோப்பெருஞ்சோழனைப் புல்லாற்றுார் எயிற்றியனார் என்னும் புலவர், வானவர்க்கு நல்விருந்து ஆகுவை என்று பாராட்டுகின்றார். -அரும்பெறல் உலகத்து ஆன்றவர் வானோர் விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே - (வானிலுள்ளவர்களது. டெறுதற்கரிய உலகத்தின்கண் அமைந்த தேவர்களின் விரைந்த விருப்பத்தோடு விருந்தினனாக ஏற்றுக் கொள்வதற்கு (விரைந்தெழுவாயாக என்று பொருள் தரும்) - இப்பாடலடிகளும், கருத்தும் இங்குக் கவனிக்கத் தக்கன. மேலும், இது தொடர்பாக, இங்குக் குறிக்க வேண்டாத பல செய்திகளும் தமிழ் நூல்களுள் இடையிடையே குறிக்கப்பெற்றுள்ளன.

'நெடுமா வளவன் என்னும் ஒர் அரசன் தேவருலகம் எய்தினான் - என்ற ஒரு செய்தியைப் புறநானூறு 228ஆம் பாடல் குறிக்கிறது.

இஃது, அறிவியல் வளர்ந்தோங்கி, மாந்தவியலும் மிக விழிப்புற்ற இக் காலத்தும், நந்தமக் கிடையிலும், மறைந்தொழிந்த பொது மக்களையுங்கூட, இறைவனடி சேர்ந்தார், வானுலகம் சென்றார் விண்ணுலகம் ஏகினார், 'சிவபதம் அடைந்தார் கைலாயப் பதவியடைந்தார் வைகுண்டப் பதவி அடைந்தார் முதலிய குறிப்பீடுகளால் குறிப்பிடப்பெறும் ஒரு வகை மங்கலக் குறியீடுகள் என்றே கருதுதல் வேண்டும்.

- திருவள்ளுவரும், அறிவியல் விளங்காத மதவியலே வாழ்வியலாகக் கருதிய, ஆரியர்தம் கள்ளமும் கரவும், சூழ்ச்சியும், மாட்சியும் கையோங்கி வந்துகொண்டிருந்த அற்றைப் பொழுதில் வாழ்ந்த பெருந்தமிழ்ச் சான்றோர் என்னினும், மூட நம்பிக்கைகளின் முழுமைத் தன்மையும் நன்கு விளங்காதவராகவே சிற்சில விடங்களில்

கருத்தறிவித்துச் செல்வர். அத்தகையவற்றுள் இதுவும் ஒன்று என்று