பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 அ 2 - 6 - இனியவை கூறல் - 0

அ-2- இல்லறவியல் அ-2-6 இனியவை கூறல் - 10 அதிகார முன்னுரை:

விருந்தோம்பல் உலகியல் உறவுக்கு அடிப்படை என்று முன்னர் உணர்த்தினோம். அம் முயற்சிக்கு இனியவை கூறல் ஒரு கருவி. ஒர் அணுகு முறை. எனவே இவ்வதிகாரம் விருந்தோம்பலின் பின் வைக்கப் பெற்றது.

வருகின்ற விருந்தை முக மலர்ச்சியுடன் வரவேற்று இனியவை கூறுதலுடன் உலக உறவு தொடங்குகிறது.

புதியவர்களாக வந்த விருந்தினர், பழகியவர்களாகவும் பழையவர்களாகவும் நண்பர்களாகவும் வளர்ச்சியுற இணிையவை கூறல் தேவைப்படுகிறது. அத்துடன், அது பிறர்தம்மோடும் உறவாடும் வகையில் பரவலாக்கப்பெறுகிறது. - - - -

ஒருவர் உள்ளத்து உணர்வுகளை மற்றவர்க்கு அறிவிக்க மொழி உதவுகிறது - என்றால், அம் மொழியை மற்றவர்கள் செவி கொள்ளவும், மனங் கொள்ளவும், நினைவிலிருத்தவும், அம் மொழியோடு கலந்து தரும் அன்புணர்வு உதவுகிறது. அந்த அன்புணர்வுக்கு அடையாளமே இனியவை

அன்புள்ளவர்கள், அன்பு செலுத்துபவர்களிடம் இனிமையாகத் தான்

உள்ளத்தில் அன்பும் கனிவும் இல்வாயின் வாய்ச் சொற்கள் இனிமையாக இரா. - * -- * ". . . . -