பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327

அ - 2 - 6 - இனியவை கூறல் - 10

பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து சொல்லுதல் என்னும் கூற்று, மனவியல்புக்குப் பொருந்தாதது. சொல்லுதல் நிகழ்வின் பொழுது, சொல் தேடுத்ல் உணர்வு செல்லாதாகலின். o i.هم فة --- இதனை மொழியறிவர் பாவாணரும் வழி மொழிந்தது, அவரின் சொல் தேடலின் அருமுயல்வால் கொண்டினவுணர்வால் என்க. - மேலும், அல்லவையைப் பாவம்' என்று பரிமேலழகர் கூறியதும் அடாதது. அஃது, அவரின் வேதமதவழிப் பாவ புண்ணியக் கருத்துக்கு வலிவூட்டிக் கொள்வதுமாம். - அதேபோல், தேய்தல் என்பதற்குத் தன்பகை ஆகிய அறம் வளர்தலின் (பாவம்) தனக்கு நிலையின்றி மெலிதல்' என்றும், தவத்தின்முன் நில்லாவாம் பாவம் (நாலடி - 5) என்பது உம் இப்பொருட்டு என்றும் விளக்கம் கூறுதலும், பொதுநலக் கூறாகிய அறத்தை, மதச்சேற்றில் புதைக்கும் கொடுஞ்செயலாகும். - பாவம்' என்பது, ஏதோ சாணிமலை போல் வளர்ந்திருக்கும் என்பதும், புண்ணியம் ஏதோ வெயில் போல் உருக்கொண்டு அதை உறுத்துக் காய்ச்சிக் குறைக்கும் என்பதும் பரிமேலழகரின் ஆரியவியல் சார்ந்த மதமூடக் கற்பனையேயின்றி, அறிவியலுக்கும் மெய்யறிவியலுக்கும் பொருந்தாவென்க. - நல்லவை - நல்ல செயல்களும், தீயவை தீய செயல்களும் என்னும் பொதுவுண்மை, புண்ணிய பாவக் கோட்பாட்டின் கீழ்ப் பகுக்கக் கூடியவை அல்ல. அவ்வாறு பகுப்பது மதம். அவற்றை உலகியல் வழியாகப் பார்த்து, மாந்தவியல் வழியாகப் பொருள் கொள்ளுவதே அறம் என்க. . . . . . :

-இவ்வாறு பொருள் கற்பிக்கும் பரிமேலழகரது நோக்கம், அறத்தைத்

'தர்மம் என்று கொண்டு, அதற்கு வேதத்தை அடிப்படையாகக் கூறி, ஆரியவியலை நிலைநாட்டுவதே என்க. - .

இவ்வகையில் பரிமேலழகரை ஒட்டி உரைப்பாரும், அவர் سیمو வழிப்படுதலும், அவரின் ஆரியவியல் சூழ்ச்சி அறியாராகுதல் பற்றி என்க. .

– மொழியறிவர் பாவாணரும், 'அறம் நல்வினை என்றும்,

'அறமல்லாதவை தீவினைகள் என்றும், தீவினைகள் தேய்தலாவது,

இருளும் போல மறுதலைப் பொருள்களாதலின், ஒளியின் முன் இருள்