பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ-1-1-அறமுதல் உணர்தல்-முன்னுரை

53


இருக்கிறது இருக்கிறது இருக்கிறது இருக்கிறது!

இருக்கிறது இல்லாமல் இருக்கிறது இல்லை;

இல்லாமல் இல்லாமல் இருக்கிறது இல்லை.

இருக்கிறதும் இல்லாமல் இல்லையும் இல்லை.

இல்லையும் இல்லாமல் இருக்கிறதும் இல்லை!

இருக்கிறது இருக்கிறது இருக்கிறது இல்லை.

இல்லாமல் இருக்கிறது இருக்கிறது இல்லை.

இருக்கிறது இருக்கிறது இல்லை இல்லை

இல்லை இருக்கிறது இல்லை இல்லை!

இருக்கிறது இல்லாமல் இருக்கிறது இருக்கிறது,

இல்லை இல்லாமல் இருக்கிறது இருக்கிறது;

இருக்கிறது இல்லாமல் இல்லை இருக்கிறது;

இல்லை இல்லாமல் இல்லை இருக்கிறது!

இருக்கிறது இருக்கிறது இல்லை இருக்கிறது;

இல்லை இருக்கிறது இருக்கிறது இருக்கிறது

இருக்கிறது இருக்கிறது இருக்கிறது இல்லை!

இல்லை இல்லை இல்லை இல்லை!

இல்லை!

இருக்கிறது!

- உரையாசிரியர் (தென்மொழி சுவடி, 9. ஒலை 11)

க. அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

பொருள் கோள் முறை (அன்வயம்);

எழுத்து எல்லாம் அகரம் முதல;

உலகு ஆதி பகவன் முதற்றே.

பொழிப்புரை: எழுத்துகள் எல்லாம் அகரத்தை (அவை முதலாக உடையன. (நாம் வாழும் இவ்வுலகம் இதன் தோற்றத்திற்கும், விளக்கத்திற்கும், மாற்றத்திற்கும், அடிப்படைப் பொருளாகவும் அறிவாகவும் உணர்வாகவும் நிற்கும் மூல இயங்கியல் அறமுத்ல் கூறாகிய இறைவனை முதலாக உடையது.