பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அ-2-9 அடக்கம் உடைமை -3

- அடக்கி யொழுகுதலாவது, தேவையான இடத்துக் கொண்டு

செலுத்தியும், தேவையல்லாத இடத்துத் தடுத்து நிறுத்தியும் செல்லும் குதிரைமேல் அமர்ந்து ஊர்வான் போல் என்க.

- ஆமை காப்புடைய உயிரி. ஏமம் காப்பு - ஏமை காப்புடையது.

ஏமை ஆமை. யானை ஆணையானது போல் என்க. 3. எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுகின்ற பிறவிதோறும் உயிர்க்குக்

காப்பாக அமையும் தன்மை உடையது.

எழுமை என்பதற்கு விரிவான விளக்கம் குறள் 62இல் கூறப்பெற்றது. ஆண்டுக் காண்க

ஏமம் + யாப்பு - ஏமாப்பு. யாப்பு கட்டுவது; அமைவது.

- காப்பாக அமைந்தது. மார் + யாப்பு - மாராப்பு ஆனதுபோல். எழுமையும் என்பதற்குப் பாவாணரையும் உள்ளிட்டுப் பழைய உரையாசிரியர் அனைவரும், ஏழு பிறப்பு என்றே பொருள் கொள்வது பொருந்தாது என்பதற்கான விரிவு 62ஆம் குறள் விளக்கத்திலேயே கூறப்பெற்றிருப்பது காண்க - அதற்கு இற்றைப் புலவர் ஓரிருவர் எக்காலத்திற்கும் என்று பொருள் தருவதும், நூலாசிரியரின் பிறவிக் கொள்கையை மறைத்தும் மறுத்தும் கூறிய திரிபுரையே என்க. தமக்கு ஒப்பாத கருத்தை ஆசிரியர் மேல் ஏற்றிக் கூறுவது அறனுமாகாது, என்க. - . 4. இஃது, ஐம்பொறிகள் அடங்கிய மெய்யடக்கம் கூறியதால், முன்னவற்றின் பின் வைக்கப்பெற்றது. o

கஉள. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. - 127

பொருள்கோன் முறை : -

யாகாவார். ஆயினும் நாகாக்க காவாக்கால் சொல்லிழுக்குப் பட்டுச் சோகாப்பர்.

பொழிப்புரை : ஐம்பொறிகளையும் ஒருவன் ஒருங்கே அடக்கி அல்வழியிற்

செல்லாதவாறு காத்துக் கொள்ளவில்லையாயினும், அவற்றுள் ஒன்றான வாயுறுப்பாகிய நாவினை மட்டுமாகிலும் அவன் அடக்கிக் காத்துக்