பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

107


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 107

கொள்வது நன்மை தரும். அவ்வாறு அவன் அதைக் காக்கத் தவறினால், பலவகையான இழிசொற்களுக்கும் பழிசுறலுக்கும் ஆளாகி, இறுதியில் குற்றஞ் சுமத்தப்பட்டுக் கடுஞ்சிறையும் காக்கவேண்டி வரும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. யாகாவார் ஆயினும் நா காக்க - ஐம்பொறிகளையும் ஒருவன் ஒருங்கே அடக்கி, அல்வழியிற் செல்லாதவாறு காத்துக் கொள்ள வில்லையாயினும், அவற்றுள் ஒன்றான வாயுறுப்பாகிய நாவினை மட்டுமாகிலும் அவன் அடக்கிக் காத்துக் கொள்வது நன்மை தரும். யா யாவற்றையும், அவற்றை என்னும் சுட்டும், முற்றும்மையும் தொக்கன.

நா - நாவு என்பதன் கடைக்குறை.

- மாவு, மா என்றும் சாவு, சா என்றும் நோவு, நோ என்றும் நின்று பொருள் தருவது போல்,

- நாவுதல் ஒலியெழுப்புதல் - கொழித்தல், காத்தல் - அடக்கி, அல்வழியிற் செல்லாதவாறு காத்தல்.

- காக்கப் படுக்கும் இந்திரியம் ஐந்தினும்

நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே - வளையாபதி - என்றார் பிறரும். - 2. காவாக்கால் - காக்காதவிடத்து, அவ்வாறு அதை அவன் காக்கத்

தவறினால். . -

கால் இடப்பொருள் குறிக்கும் ஒரு வினையெச்ச ஈறு. 3. சொல் இழுக்குப் பட்டுச் சோ காப்பர் இழிசொற்களுக்கும் பழி கூறலுக்கும் ஆளாகி, இறுதியில் குற்றம் சுமத்தப்பட்டுக் கடுஞ் சிறையும் காக்க வேண்டி வரும். ஐம்பொறிகளுள்,

- கண், தவறானவற்றைக் கண்டாலும், - காது, தவறானவற்றைக் கேட்டாலும், மூக்கு, தவறானவற்றை நுகர்ந்தாலும், - மெய், தவறானவற்றைத் துய்த்தாலும், - - அக் குற்றங்கள் தம்மளவில் மட்டும் தீங்கு செய்வதைப் பிறர்க்குத் தெரியாதவாறு மறைத்து விடலாம். - . ஆனால் நாக்கை அடக்க இயலாதவன் குற்றம் பிறரால் அறியப்பட்டுத் தண்டனைக்குள்ளாவது வெளிப்படையாகலான், அவன் அதனால் பலவகையான இழிசொற்களுக்கும், பழி கூறலுக்கும் ஆளாகி,