பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

125


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 5

பொழிப்புரை ஒருவனது தனியொழுக்கம் அவனுக்கு அனைத்துச் சிறப்புகளையும் தருவதால், அவ்வொழுக்கம் அவனது உயிரைவிடச் சிறப்பாகப் பேணப்பெறுதல் வேண்டும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒருவனது தனிநிலை ஒழுக்கம் அவனுக்கு அனைத்துச் சிறப்புகளையும் தருவதால்.

2. ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும் - அவ்வொழுக்கம் அவனது

உயிரைவிடச் சிறப்பாகப் பேணப் பெறுதல் வேண்டும்.

- பேணப்பெறுவது உடலே எனினும், அதன்வழி உயிர் பேணப்

பெறுவதால் உயிரினும் என்றார்.

உடலுறுதி உயிர்க்கு உறுதி. எனவே உடல் ஒழுக்கம் உயிரைக் காப்பது.

உடல் நோக்கியே அனைத்து முயற்சிகளும் செய்யப் பெறுகின்றன. அவ்வுடல் நலமின்றாயின், உயிர் கெடும்; அவ் வுடலை விட்டு ஏகும். எனவே, உடலை ஒம்பும் பொழுதே உயிரும் ஒம்பப் பெறுகிறது.

- உடலை ஒம்புவது, உணவுப் பொருள்களே என்றாலும், தாறுமாறாக

இயங்கின் அவ்வுடல் கெடும். அஃது அவ்வாறு இயங்காமல் காப்பது ஒழுக்கம். ஒழுக்கம் இல்லாதவனின் உடல் கெடல் உறுதி. உடல் கெடுவது உயிர்க்கு இறுதி உயிரை எவரும் நேரிடையாகக் காக்க முடியாது; உடல்வழிதான் உயிரைக் காக்க வியலும்,

எனவே ஒழுக்கம் உடலைக் காப்பதன்வழி உயிரையும் காக்கிறது.

இவ்வாறு இயல்பாக உயிர் காக்கப்பெறும் பொதுத்தன்மையைவிட,

இன்னும் சிறப்பு முயற்சியால் அவ்வுயிரை இன்னும் நீண்ட நாள் உடலில் தங்கியிருக்குமாறு செய்ய வேண்டுமானால், அவ்வுயிரைவிட ஒழுக்கத்தையே காக்க வேண்டும் என்று கூறினார். அப்பொழுதுதான், ஒழுக்கத்தின்வழி உடல் காக்கப்பெற்று, உடல்வழி உயிர் காக்கப்பெறும் மற்றபடி உயிரை ஒம்புவதற்கு வேறு முயற்சிகள் இல்லை என்று குறிப்புணர்த்தினார் என்க. உயிரை ஒம்புவது அல்லது காப்பது, அதனை நீண்ட நாள் உடலில் தங்கியிருக்கும்படி செய்வது. -

உயிர் இயல்பாகவே உடலைவிட்டுப் பிரிய விரும்புவதில்லை. உடல்

முடமுற்று, நடையின்றி, நலிந்து, நாறிக் கிடப்பினும், அவ்வுயிர் விட்டுப் பிரிய மனமின்றி, அவ்வுடலோடேயே ஒட்டிக்கிடந்து வாழவே

விரும்புகிறது.