பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அ-2-10 ஒழுக்கமுடைமை 14

எனவே, தனிமுயற்சியால் பேண வேண்டுவதில்லை; அவ்வாறு பேணவும் முடியாது. ஆகவே, உயிரைக் காக்க விரும்பின் உடலைக்காப்பது இன்றியமையாதது. உடலை வளர்ப்பது நன்னிலையில் வைத்திருக்க உணவு உதவுவது போல், உடலைக் காப்பது ஒழுக்கமே.

ஒழுக்கம் இல்லையாயின் உடல் கண்டிப்பாகக் கெட்டுப் போவது உறுதி உடலின்றி உயிர் இயங்காது. எனவே உயிரைக் காக்க வேண்டின் ஒழுக்கத்தை அவ்வுயிரைவிட மேலாகக் காத்தல் வேண்டும் என்றார். ஒழுக்கத்தைக் காவாதவன் உடலையும் காக்க இயலாது உயிரையும் காக்க வியலாது என்று குறிப்புணர்த்தினார்.

இங்கும், இக்கருத்தினைத் தெளிவாக விளக்க, முன்னர்க் கூறிய (குறள் 19) ஒர் எடுத்துக்காட்டே சாலவும் பொருந்தும்.

- அஃதாவது, உயிரைப் பால் என்று கொண்டால், அப்பால் உள்ள கலம் (ஏனம்) உடல், உடலாகிய ஏனம் (கலம்) தூய்மையாக இருந்தால்தான், உயிராகிய பாலும் கெடாமல் இருக்கும். இங்கு உடல் தூய்மை என்பது ஒழுக்கம். உடல் தூய்மை அஃதாவது ஒழுக்கம் இல்லாது போனால் உடலாகிய ஏனம் கெட்டதாகி, அதிலுள்ள உயிராகிய பாலையும் கெடுத்துவிடும் என்னும் உவமையைப் பொருத்தி மகிழ்க

‘பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந்தற்று’ - #000

- ஒழுக்கமின்மையால் உடல் கெடுவது, ஒழுக்கம் இல்லாதவன் உடலைப் பல வகையிலும் வருத்துவது கண்கூடு. உடல் கழிகாமத்தின் வழிப்படுவது ஒழுக்கம் கெடுவதற்கு அடிப்படை அதன்வழி உடலை இயக்குபவன் பல்வகைக் கொடிய நோய்களுக்கும் ஆளாகிறான். அக் காமவழி நோய்கள் உடலைப் பலவகையாலும் சிதைவுறச் செய்யும். செய்யவே, உடல் நலிவுற்று நாறி, உழன்று கெட்டு உயிரிழத்தல் செய்கிறது என்பதை உணர்க. உடல் கெட்டு உயிரிழப்பதைவிட, உடலை ஒழுக்கத்தால் பேணி உயிரைக் காப்பதே இங்குக் கூறப் பெறுகிறது. - இஃது ஒழுக்கம் உடல் வளர்ச்சிக்கு மட்டுமன்று. உயிர் நிலைப்புக்கும் அடிப்படையானது ஆகலின், அதைக் காத்தல் அவ்வுயிரைக் காத்தலினும் இன்றியமையாதது என்று கூறலால், இது முன்னர்க் கூறப்பெற்றது. .