பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

127


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 7 கங்உ. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை. . - #32

பொருள்கோள் முறை :

ஒழுக்கம் பரிந்துஒம்பிக் காக்க; தெரிந்து ஒம்பித் தேரினும் அஃதே துணை.

பொழிப்புரை தன் ஒழுக்கத்தை மிகமுயன்று பேணிக்காத்துக் கொள்க. ஒருவற்கு வேண்டிய அனைத்து நிலைகளையும், அவற்றின் தேவைகளையும் சீர்தூக்கி ஆராய்ந்து உணர்ந்து, அவற்றுள் சிறந்த ஒன்றைத் தேர்ந்தாலும், அதுவே அவனைக் காக்கின்ற துணையாக உள்ளது.

சில விளக்கக் குறிப்புகள் :

1. இதில், ஒழுக்கம் காப்பதன் கடினமும், இருப்பினும் அதைக் காத்துக்

கொள்ளும் இன்றியமையாமையையும் கூறுவார். 2. ஒழுக்கம் பரிந்து ஒம்பிக் காக்க - தன் ஒழுக்கத்தை மிக முயன்று

பேணிக் காத்துக் கொள்க. -

பரிதல் முயற்சியின் வருந்துதல்

- வருந்தி முயலுதல் - மிகு முயற்சி செய்தல். ‘பரியினும் ஆகாவாம் பாலல்ல’ - 376 ஒம்புதல் - பேணுதல்.

- காத்தல் என்னும் பொருளும் உண்டு.

எனினும் இதையடுத்து வேறாகக் காக்க என்பதால், இது பேணுதல் பொருளைக்

. கொண்டது. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் - 88 ஒழுக்கம் தவறுதல் எளிது; காத்தல் மிகுகடினம்.

எளிது என இல்லிறப்பான் - #45

- என்பது காண்க.

. புலன்கள் எப்பொழுதும் போராட்டத்திற்குரியன. எப்பொழுதும் மனத்தின்வழிச் செல்வன. அறிவின்வழிச் செல்வதும், செலுத்துவதும் மிகு கடினம். அதனை

‘உரன் என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்’ - 24

என்பதானும்,