பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

153


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 153

- இவ்விரு கூறுகளும், அவற்றின் வளர்ச்சியும் மக்கள் அல்லாத பிற

உயிரினங்களுக்கு இல்லை.

- ஆனால், அவற்றிற்கு மக்களின் பிற உயிரியல் செயற்பாடுகளான ஊண் உண்ணல், உடையணிந்திருத்தல் போலும் நிறம், தோற்றம், பொலிவு, காப்பு முதலியவும், ஆண்பெண் மருவுதல், இன்பங் கொள்ளுதல், உயிர் ப்பெருக்கம் செய்தல், கூடிவாழ்தல், தலைமைதாங்கல், பகையொழித்தல், உறையுள் அமைத்தல் முதலியன யாவும் உண்டு எனல் அனைவரும் அறிவதே. இவ்வுண்மைதான், மேற்காட்டிய,

‘ஊண் உடை எச்சம் (1012) என்னும் மெய்யுரையிலும் விளக்கப்

பெற்றுள்ளது.

- காட்டு விலங்காண்டிகளும் கயமை மாந்தர்களும், பிற மக்களைப் போலவே, ஐம்பொறிகள் செயலுறுப்புகள், பிற அறிவு விளக்க நிலைகள் முதலிய யாவற்றிலும் மக்களை ஒத்திருப்பினும், பண்பும் ஒழுக்கமும் இல்லாது, மேவன செய்து (107) இயங்குவதால், பண்பில்லாதவர்கள் அவர்களைப் போன்றவரே என்னும் உண்மையை. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் (993) என்னும் வாய்மையுரையிலும், - அறிவில் கூர்மையுடையராக விருந்தும், பண்பு வளர்ச்சியில்லா அறிவுடையவர்கள், பிற பயன்களைக் கொண்டிருப்பினும், மக்கள்

தன்மையில்லாமல் ஓரறிவுயிராகவுள்ள மரம் என்னும் இடித்துரையை, அரம்போலும் (997) என்னும் பொய்யாமொழியினும்,

மாந்த நிலையினின்று இழிந்து நிற்பவர் தலையினின்று இழிந்து, பெருமையிழந்து நிற்கும் மயிரினுக்கு இணையாகக் கருதப் பெற வேண்டியவரே என்னும் உண்மையைத்

தலையின் இழிந்த மயிரனையர் 69 என்னும் சால்புரையிலும் ஆசிரியர்

விளக்குவது காண்க.

- எனவே, இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடுதலை நூலாசிரியரே அவ்வவ் விடங்களில் காட்டுவது அவர் கருத்தைத் தெள்ளிதின் உணர்த்தவே என்க. * -

இஃதிவ்வாறிருக்க, நம் முன்னைய உரையாசிரியர்களான மணக்குடவ்ரும், பரிமேலழகரும் அவர் சார்பின்ர் பிறரும் கொண்டு கூறும் உரை நல்லறிவினார் நகைக்கத்தக்கதும், நன்மக்கள்ாயி நான்த்தக்கதும், நடுநிலையாளர் கடியத் தக்கதுமான இழுக்கு.ை காண்க * * ‘ * - - - - - - -