பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 அ-2-11 பிறனில் விழையாமை 15

என்றார் பிறரும்.

முந்துதமிழ் மக்களே அவற்றை மாந்தப் பண்பியல் உணர்வுகளாக வளர்த்தெடுத்து, அக நிலையிலும், புற நிலையிலும், பற்பல நடைமுறைத் திருத்தமுறச் செய்து, வரைதுறையின்றி யிருந்த ஆண்பெண் ஒழுகலாறுகள் சான்றோர்களால் கண்டிக்கப்பெற்றும், கடியப்பெற்றும் திருமண வாழ்க்கையே கற்பு வாழ்க்கை எனப் போற்றிக் கொண்டனர்.

அக்கால் முல்லைநில நாகரிகம் தொடங்கியது ‘முல்லை என்னும் சொல் கற்பைக் குறித்ததும், இதனடிப்படையிலேயே என்க.

இந்தக் கற்பிக்கப் பெற்ற ஆண் பெண் ஒழுக்கமுறையான கற்பு நிலை. மக்களிடம் படிப்படியாக வளர்ச்சி பெற்று, ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கடைப்பிடியாக வளர்ந்து இல்லற அமைப்பு ஏற்பட்டது. அதனடிப்படையில் மணமுறை வலியுறுத்தப் பெற்றது.

தமிழியல் நெறிப்படி, மனத்திற்கு முன்னர் ஈடுபடும் ஆண், பெண் ஒழுகலாறு களவு என்றும், மணம் செய்து கொண்டபின் ஈடுபடும் ஒழுகலாறு கற்பு என்றும் கூறப்பெற்றன.

களவொழுக்கக் காலத்தும் ஆண்மகனிடம் அவனி விரும்பும் பெண்ணை, அல்லது அவன் களவில் பழகும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தப்பெற்றது.

இஃது, அகத்திணை (அகவொழுக்கம் இலக்கணத்துள் வரைவு கடாவுதல் திருமணத்தை வற்புறுத்தல்) என்னும் ஒரு துறையாகவே விரிந்தது.

‘கற்பெனப் படுவது காணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே

- தொல் : 1088 ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” - - தொல் : 1.091

ஐயர் - பெரியார்: கரணம் . நிகழ்முறை சடங்கு - எனும் இவ் விரண்டு தொல்காப்பிய நூற்பாக்களும் அந்நிலைகளை

திருமணம், வரைவு, வரைதல் எனப்பெற்றது. வரைதல் ஆண், பெண் ஒழுக்கத்திற்கு வரை எல்லை இடல். திருமணம் செய்யாது, தம் விருப்பம் போல் ஒழுகும் பெண்டிர் வரைவின் (வரைவு + இல் மகளிர் எனப்