பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

19


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 19

இங்குத் துக்குதல் என்பது துலாக்கோல் கொண்டு சீர்தூக்கிப் பார்ப்பதுபோல் ஆராய்ந்து பார்த்தலைக் குறித்தது. துலாக்கோலைத் துக்கிப் பார்ப்பதால், தூக்குதல் ஆராய்ந்து பார்த்தலைக் குறித்தது என்க. து மேல், வானம். கூ நிலம், ஒரெழுத்தொரு மொழிகள், எனவே தூக்கு - என்பது, தரையினின்று மேலே உயர்த்திப் பார்ப்பதைக் குறித்தது, என்க. 2. நயன் தூக்கின் நடுநிலையாக ஆராய்ந்தால் (194) நயன் - இங்கு நேர்மை, நடுநிலை, நீதி (வ.சொ.). (பார்க்க பாவாணரின் தமிழ் மரபுரை, குறள்.97).

இந்நூலில் இச்சொல் நயம், நயன் என இயல்பு, போலி ஆகிய இருவகையிலும் பயன்படுத்தப் பெறுகிறது.

இவற்றுள் நயம் என்னும் இயல்பான சொல் விருப்பம் என்னும் பொருளில், 147, 150, 439, 580, 118, 1232 ஆகிய ஆறு இடங்களிலும், - இணக்கம், உடன்படல் என்னும் பொருளில் 189, 1190 ஆகிய இரண்டு இடங்களிலும்,

- நட்பு என்னும் பொருளில் 860 ஆகிய ஓர் இடத்திலும், - நன்மை என்னும் பொருளில் 314, 998 ஆகிய இரண்டு இடங்களிலும், . -

- சிறப்பு என்னும் பொருளில் 783 ஆகிய ஒர் இடத்திலும், ஆக மொத்தம் பன்னிரண்டு இடங்களிலும், -

- நயன் என்னும் ஈற்றுப் போலிச் சொல், விருப்பம் என்னும் பொருளில் 192, 197 ஆகிய இரண்டு இடங்களிலும்,

- சிறப்பு என்னும் பொருளில் 97 ஆகிய ஓர் இடத்திலும், - நேர்மை, நடுநிலை, நீதி) என்னும் பொருள்களில் 103, 193, 194 216, 219, 912 ஆகிய ஆறு இடங்களிலும்

ஆக மொத்தம் ஒன்பது இடங்களிலும் வருகின்றன. எனினும், பொதுவாக நயம், நயன் இரண்டு சொற்களுக்கம் நடுநிலை அல்லது நேர்மை என்பதும் விருப்பம் என்பதுமே பொருளாகும்.

இனி, நயம் என்னும் சொல்லே நாயம், ஞாயம் என்று வளர்ந்து

நயம் என்னும் சொல்லை வடநூலார் நியாயம் என்று திரித்துக் கொண்டனர். . x 3. நன்மை கடலின் பெரிது அத்தகைய உதவியின் நன்மை கடலினது

நன்மையினும் பெரிது என்பதாம். ; : : என்னை: கடலின் பெரிது என்பதைக் கடலினும் பெரிது என்று பொருள் கொள்வது, மின்கப்படுத்திக் கூறுவதாகும் (exaggeration).