பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 1

அல்லது பொருளின்றி வெறுமையாகக் கூறியதாகிவிடும் என்க. இவ்வாறு கூறுவது அறநூலார்க்குப் பொருந்துவதன்று.

கதைபோல் கூறுவதும், கற்பனையாகக் கூறுவதும், அழகுபடுத்திக் கூறுவதும் அறநூலுக் கொவ்வா என்க. .

‘அவ்வாறாயின் எப்படி என்று ஒரு வினாவெழுப்பின், இப்படி என்று எவரும் விடைகூறுதற் கியலாது.

பொருத்திக் கூறவியலாத உவமையோ, பொருள் தெளிவற்ற எடுத்துக் காட்டோ அறநூலுள் மேற்கொள்வது இழுக்காகும்.

‘கடலைவிடப் பெரிது’ என்று சிறுபிள்ளைத்தனமாக ஒரு பேச்சுக்குக் கூறுவது, உலகியலுக்கும், கலைக்கும், ஆரியத் தொன்ம (புராணத்திற்கும் பொருந்துவதாகும். எனவே, நூலாசிரியர் கருத்து இஃதாதல் இயலாது.

பின்னை அவர் கருத்து ஏதுவாக இருக்குமெனில், கூறுவாம். கடல் பெரிதெனினும் அதன் நீர் நேரிடையாகக் குடித்தற்காகாது. மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணிரும் ஆகாது); அதனருகே சிற்றுறல் உண்ணிரும் ஆகி விடும். - வாக்குண்டாம்.12. என்றார் பிறரும். .

கடலால் கிடைக்கும் தனிமாந்த நன்மை உப்பு ஒன்றே. பொது மாந்த நன்மை மழை. மற்றும் அதனின்று கிடைக்கும் மீன்வகை. உணாவோ புலால் உண்பார்க்கே பொருந்துவது. இவற்றின் மேலும் அதனின்று கிடைப்பன முத்து, பவளம், சங்கு போலும் அணிமணிப் பொருள்களே. இவையனைத்தும் உடல் நலத்துக் குகந்தவையே, உள நலத்துக்கு ஆகியவை அல்ல. - ஒருவர்க்குச் செய்யும் உதவி அவரது மானம் காத்து உளத்துக்கும் வாழ்வுக்கும் நலஞ்செய்வதாகையால், அவ்வுதவி கடலினின்று கிடைக்கும் உதவியினும் பெரிது என்றார், என்க. இதனால்தான் நடுநிலையோடு ஆராய்ந்து பார்த்தால் - நயன் தூக்கின் என்றார். மற்றபடி நடுநிலையோடு ஆராய்ந்து பார்ப்பதற்கு அதில் ஒன்றும் இல்லை. அவ்வாறல்லாவிடில் அவையும் வெற்றுச் சொற்கள் ஆகிவிடுவது காண்க. - இனி, இக்குறளுக்கும் முன்னைக் குறளுக்குப் போலவே உரையாசிரியர்

அனைவரும் பொருந்தாப் பொருளே புகன்றுள்ளனர் என்க. மணக்குடவர், தமக்கு ஒருபயனை நோக்காதவராய்ச் செய்த உபகாரத்தால் உண்டாய நன்மையை ஆராயின் அதனாலுண்டாய நன்மை கடலினும் பெரிது என்றும்,