பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 அ-2-12 பொறையுடைமை 16 வறுமை என்று குறியாது இல்லாமை என்று குறித்தார் என்க. இனிச் சிலர் இத் தொடர்க்கு, கொடிய வறுமையிலும் வறுமையாவது, வந்த விருந்தினரைப் பேண முடியாமை என்று பொழிப்புத் தருவது, பொருந்தாமையினும் பொருந்தாப் பொருளதாம், என்க. - இங்கு ஆசிரியர் குறிப்பது விருந்தினரைப் பேண முடியாமை அன்று, ‘விருந்தைத் தவிர்ப்பது, விருந்தைத் தவிர்க்கும் நிலை வேறு; பேணமுடியாத நிலை வேறு. இனி, பேண முடியாததால் தவிர்ப்பது . இன்னும் கீழானதாம் என்று விடுக்க - விருந்தோம்புவது என்பது வயிறு முட்ட உண்ணவும் தின்னவும் கொடுத்துத்தான் பேண வேண்டும் என்பதன்று. பருக நீர் தரினும், பச்சைக் கீரையை அவித்துப் படைப்பினும் அன்புடன் தந்து, இனிமையுடன் பேசிப் பண்புடன் பழகுவதே சிறந்த விருந்தோம்பலாம்: என்பது கீழ்வரும் ஒளவையார் பாடல்களால் உணர்க.

‘வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய் நெய்தான் அளாவி நிறம்பசந்த பொய்யாய் அடகென்று சொல்லி அமிழ்தத்தை இட்டார் கடகம் செறிந்தகை யார்’ ‘காணக்கண் கூசுதே கையெடுக்க நானுதே மானொக்க வாய்திறக்க மாட்டாதே - வினுக்கென் என்பபெல்லாம் பற்றி எரியுதே ஐயையோ அன்பிலாள் இட்ட அமிழ்து.’ - - தனியன். - இனி, ஒரால் என்பது ஒருவல் என்பதன் திசைவு - நீக்குவது, தவிர்ப்பது

என்னும் பொருள் தருவது. - தழுவல் என்பது தழால் (சுற்றம் தழால் 53ஆம் அதிகாரத் தலைப்பு

என்றானது போல, ஒருவல் - “ஒரால் என்று ஆனது. - இனி, இன்மையுள் இன்மை என்பதற்கு, மணக்குடவர், வலியின்மையுள்

வைத்து வலியின்மை யாவது என்று பொருள் தருவதும், காலிங்கர், இனிமைகளுள் வைத்து மிகவும் இனிமையாவது என்று

பொருள் படுத்துவதும், வியப்பும், நகைப்பும் தருவனவாம். 2. வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை - அதுபோல், வல்லமையுள் மிகுந்த வல்லமையாவது, பேதையர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்வது.

வன்மையுள் வன்மை - வல்லமையுள் மிகுந்த வல்லமையாவது.