பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

23


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 23

அவ்வாறு கருதவேண்டும் என்பது ஆசிரியர் நோக்கமாகத் தெரியவில்லை. அதற்குப் பயன்பொருளும் கொள்ளப் பெறுதல் அவர் கருத்தாதல் வேண்டும். அவ்வாறு கொள்ளின் துணை என்பதற்கு இணை என்னும் பொருளே சிறப்பதாகும். அக்கால் தினைக்கு இணையாக, பனைக்கு இணையாக என்று விளக்கம் பெறும்; அதில் பயன் பொருளும் கிடைக்கும். அஃதாவது தினை அளவில் சிறியதெனினும் விளைவுக்குப் பேருழைப்புப் பெறுவது. உழுதல், விதைத்தல், எருவிடல், நீர் பாய்ச்சல் அல்லது பருவமழை எதிர்பார்த்தல், காத்தல், அறுத்தல், அடித்தல் முதலியவை செய்து அல்லது செய்வித்துத்தான் பயன்பெறுதல் முடியும். ஆனால் பனைப்பயன் அவ்வளவு கடின உழைப்புத் தேவையில்லாதது. அதன் கொட்டையை எங்கேனும் ஓரிடத்தில் தூக்கி யெறிந்தாலும் அது கிழங்கூன்றி வேர்பிடித்து மரமாக வளர்ந்து பயன்தரக்கூடியது. அஃதாவது, வேறு எந்தப் பயிரினத்திற்கும் செய்கின்ற எந்த முயற்சியும் பனைக்குத் தேவையில்லை. அதன் கொட்டையை மண்ணில் பதிக்க வேண்டியதுதான். நீர்விடவுங்கூடத் தேவையில்லை; எருவோ காவலோ வேறெந்த உதவியோ இறுதிவரை அதற்குத் தேவையில்லை. இவ்வாறு எந்த முயற்சியும் தேவையில்லாமல், அல்லது ஒரு தினையளவு முயற்சியே செய்தாலும், அது வளர்ந்து மரமாகித் தரும் பயன்களோ மிகவும் பெரியன; சிறந்தன. என்னை? அதன் மரமும், ஒலையும் வீட்டிற்கும், (ஓலை வேறு வகையில் அற்றைக் காலத்துச் சுவடிக்கும் இவ்வொப்பில்லாத திருக்குறளும் அப் பனையோலைச் சுவடியில் எழுதப் பெற்றதே என நன்றி நினைக்க, அதன் காய் நுங்கும், பழச்சேறுவாயும் இது சேவாய் என்றும் வழங்கப் பெறுகிறது, அதன் பாளையினின்று வடிந்த பனஞ்சாறும், இதுவும் ‘தெளிவு என்று வழங்கப்பெறுகிறது, அது முறுகிய கள்ளும், சாற்றைக் காய்ச்சிய கட்டியும் கண்டும் (பனங்கட்டியைப் பனைவெல்லம் என்றலும் கருப்பட்டி என்றலும் வழக்கு, என்றாகியவை உண்ணற்கும், இவை போகத் தும்பு, மட்டைகள், ஈர்க்குகள், ஒலைகள், செறும்புகள், நார்கள், குருத்தோலைகள் முதலிய பயன்படு பொருள்கள் (தாலசாத்திரம் என்னும் நூலுள் பனையின் வழி ஏறத்தாழ 800 பயன்கள் கிடைக்கும் என்று கூறுவதாக அறியப் பெறுகிறது. பிற கழிவுகள் அடுப்புக்கும் எனத் தன்னை முழுவதுமாக ஈகங் கொடுக்கும் பனையினது பெருகிய பயனே போல், தினைத் துணை நன்றி பெற்ற பாடுபயன் தெரிவார், அச் சிறு உதவியையும் இருகை ஏந்திப் பெறுகை செய்து ஒன்றைப் பத்தாகவும் நூறாகவும் ஆயிரமாகவும் இலக்கமாகவும் கோடியாகவும் பயன்டுத்திப் பெருகு நலன் கொள்ளும் திறனையன்றோ, ‘பனைத் துணையாக் கொள்வர் பயன் தெரிவார் என்று வியந்து