பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

253


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 253

‘அறம் கூறும் ஆக்கம்’ - - 328 ‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’ - 427 அரண் சேர்ந்தாம் ஆக்கம்’ - 492 அருப்பறா ஆக்கம்’ - 523 “நெடிதாக்கம்’ - 562 துணை நலம் ஆக்கம் - - 65 ‘மன்னிய ஆக்கம் - 692 இகல் காணான் ஆக்கம்’ - 859

- மேலும், நூலாசிரியர் ஆக்கம், அஃதாவது செல்வமும் பிறவும் முயற்சிகளால்தாம் வரும் என்பதில், வேறெவர்க்கும் இல்லாதவாறு, அத்துணை அழுத்தமான கொள்கையுடையவர். இதில் அவரின் நோக்கம் அறம் ஒன்றே. அஃதாவது பொதுமை நலமே அனைத்து ஆக்கத்திற்கும் அடிப்படையாக இருத்தல் வேண்டும் என்பது அவர் கருத்து. இம்மையோ மறுமையோ இங்குவரத் தேவையும் இல்லை; அஃது, உண்மையும் இல்லை.

- இவற்றைக் கீழ்வரும் அவர் கூற்றுகளால் உணர்க.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உழை’ - 594 ‘முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் - - 6 16 ‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ - ... 619

3. இது, பிறன் ஆக்கங்களைக் கண்டு அழுக்காறு என்னும் பொறாமைப்பட்டுக் கொண்டிருப்பவன், தன்னுடைய ஆக்கம் கருதும் அறவழிச் செயல்களைச் செய்யமுடியாமற் போவதால், ஆக்கம் இழந்துவிடுவான் என்பதை எடுத்துக் கூறுவதால், முன்னதன்பின் வைக்கப் பெற்றது. j -

கசு.ச. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து - 164 பொருள்கோள் முறை: . -

இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து,

அழுக்காற்றின் அல்லவை செய்யார்.