பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

321


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 321

- அறக்கேட்டிற்குப் பொருள் இல்லாமையும் ஒர் உலகியல் உண்மையாகலின், பொருள் இல்லாமையையும் முன்னிறுத்தி வெஃகுதலாகிய அறக்கேட்டைச் செய்யற்க என்றார், என்க.

- இதுபோல் அவர் பிறவிடத்தும் கூறுகின்றமை கவனிக்கத் தக்கது. இலன்என்று தீயவை செய்யற்க - 205

3. புலம் வென்ற புன்மையில்லாத அறிவுடையாரே, இலம் என்று வெஃகுதல் செய்யார் - என்றது, அத்தகையோரே, பிறர் பொருளைக் கவர்தலால் விளையும் படிப்படியான கேடுகளை உணரமுடியுமாகலின் என்க. என்னை? அறிவுடையார் ஆவதறிவார் ஆகலின் (42)

4. இது, சென்ற பாடலில், மற்றின்பம் வேண்டுபவர் அறனல்ல செய்யார் என்றதற்கு மேல், அவர் புலம் வென்ற அறிவுடையாராகவும் இருத்தல் வேண்டும் என்று தகுதி கூறினார் ஆகலின், அதனை அடுத்து வைக்கப்பெற்றது என்க. -

கஎரு. அஃகி அகன்ற அறிவென்னாம். யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின் - 475

பொருள்கோள் முறை :

அஃகி அகன்ற அறிவுஎன்னாம் வெஃகி யார்மாட்டும் வெறிய செயின்.

பொழிப்புரை : ஆழமாகவும் அகலமாகவும் ஒருவன் கற்ற அறிவு என்ன பயனுக்கு ஆகும், அவன் பிறன் பொருளைக் கவர விரும்பி, யாவரிடத்தும் அறிவல்லாத செயல்களைச் செய்வானாயின்:

சில விளக்கக் குறிப்புகள்

1. அஃகி அகன்ற அறிவு என்னாம்? - ஆழமாகவும் அகலமாகவும் ஒருவன்

கற்ற அறிவு என்ன பயனுக்கு ஆகும்:

கூர்த்தலும், நுண்ணிதாகிச் செல்லும் ஆழத்தைக் குறிக்கும். அகன்ற அறிவு - அகலமாக பரந்து கற்கின்ற அறிவு.

ஒருதுறையில் கற்றல் ஆழமாகக் கற்றல் பல துறைகளில் கற்றல் அகல்மோகக் கற்றல்.