பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 11 - 675 தொடர்ந்த பாவாணரும் பிறர் சிலரும் அறம் என்றே கூறுவர்.

அறம் வேறு, நன்மை வேறு. அறம் நன்மையாகலாம், நன்மை அறமாகலாம்,

ஆனால் இரண்டும் தன்மையில் செயலில் வேறுவேறு. அறம் நண்மையாவது குடிநீர்ப் பந்தல் வைத்தல். - நன்மை அறமாவது - எழுத்தறிவித்தல். அறமும் நன்மையும் வேறு வேறாவது: தீமை செய்யாதிருப்பது அறம்: ஆனால் நன்மையன்று. தடிமன் நீர்க்கோவை, சளி பிடித்தால் வெந்நீர் அருந்துவது நன்மை;

ஆனால் அஃது அறம் அன்று.

- மேலும், ஆசிரியர் இந்நூலுள் பதின்மூன்று இடங்களில் (67, 97, 102, 104, 108, 110, 117, 138, 422, 439, 652, 685, 994) நன்றி என்னும் சொல்லையும்,

- முப்பத்தொன்பது இடங்களில், (38, 49, 92, 103; 108 (2, 11, 13, 125, 128, 150, 152, 157, 197, 222, 236, 253, 259, 297, 308, 323, 328, 379, 422, 456 (2), 459, 655, 873, 715, 815, 908, 932, 967, 1038, 1072, 190, 1225 நன்று’ என்னும் சொல்லையும் பயன்படுத்துகின்றார்.

- இனி, நன்மையான செயல்களை அழித்தல் செய்வதற்கு எடுத்துக்

காட்டுகள் சில: - .

பிறர் வீட்டிற்கோ, பயிர் விளைந்த வயலுக்கோ தீயிடல், பிறர் பொருளைக் களவாடல், பிறர் வயலுக்குப் பாயும் நீரைத் தடுத்தல், பிறர் வயலில் விளைந்த பயிரை அழித்தல், உண்ணிர்க் குளத்தில் நஞ்சிடல், அல்லது மாசுபடுத்தல், பிறர் புழங்கும் வழியை அடைத்தல், பிறர்க்குரிய மரங்களை வெட்டுதல், பிறர் மக்களைக் கொலை செய்தல், பிறர்க்கு வரும் வாய்ப்புகளை வஞ்சனையால் தமக்காக்குதல், பிறர் உயிரினங்களுக்கு ஊறு செய்தல், பிறர்க்கு எதிராகப் பொய்ச்சான்று கூறி அவர்களைத் தண்டனைக்கு உள்ளாக்குதல், பிறர் பெண்களுக்குத் தீங்கிழைத்ல் - முதலியவை போன்றனவாம்.

இவ் வ்கையான குற்றங்களைச் செய்தான் ஒருவன் உய்வு பெறுதல்

யாங்ஙன் எனில், கூறுவோம். - . . . பிற நன்றி கொல்லுதல் புறத்தது. அதை மறந்துவிடல் அவனால் இயலும் அதைத் தன் வலக்காரத்தாலும், பொருளாலும், சாய்காலாலும் மற்ைத்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் இயலும் இந்நிலை உலகியலாகவும் உள்ளது. - -