பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 1

அவை, ஆணின் (பால்தரு பசுவின்) முலையை அறுத்தல், திருமணம் ஆன பெண்டிரின் கருவை அழித்தல், பெற்றோர்க்குக் கொடுமை செய்தல் ஆகியன அம் மூன்று கரிசு (பாவ)ச் செயல்களான எடுத்துக்காட்டுகள். இவை புறநானூற்றுப் பாடலில் வருவன. இனி, அந்தப் பாட்டிலேயே இம்மூன்று கொடுஞ்செயல்களைச் செய்தவர்க்கு, அக்கரிசுகளை (பாவங்களைப் போக்கிக் கொள்ளத் தீர்வும் - கழுவாயும்

உண்டு. ஆகவே அவர்கள் அதைச் செய்து, அக்கரிசுளை (பாவங்களைப் போக்கிக் கொண்டு உய்ந்து விடமுடியும். ஆனால் செய்ந்நன்றி கொன்றவர்க்கு உய்தியே தப்பிப் பிழைக்க வழியே இல்லை

என்று அறம் கூறுகிறது என்பது.

- இதில் ‘அறம் கூறுகிறது என்பதற்கு அறநூலாகிய திருக்குறள் கூறுகிறது என்பதாகப் பொருள் கொண்டு, அக்குறள் இது தான் என்று பொருத்திப் பொருள் கொள்ளப் பெறுகிறது. இப் பொருளை

முதலில் கூறியவர் பரிமேலழகரே ஆவர்.

- இங்கு அறம்’ என்று கூறியதற் கேற்பத்தான், பரிமேலழகரும் நன்றி என்பதற்கு ‘அறம் என்று பொருள் கொண்டிருத்தல் வேண்டும்.

அவ்வாறு கொள்ளவே, அதன் வழி, அவ்வறக் கேடுகளுக்கான

எடுத்துக்காட்டுகளையும் இங்குப் பொருத்திக் காட்டினார் என்க.

- அத்துடன், செய்தி கொன்றார்க்கு உய்தியில்லை என்ற அடியையும், ‘உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்னும் அடியோடு பொருத்தி, அதில் வரும் அறம் பாடிற்றே என்னும் சொற்களுக்குத் திருக்குறளாகிய அறநூல் பாடியது என்றும் பொருள்படுவதாகவும் அவர் கொண்டுள்ளார். -

- இதில், ‘அறம்’ என்ற சொல் திருக்குறளைக் குறிக்கும் என்பதற்கு, அதில் வரும் செய்தி கொன்றார்க்கு உய்தியில்லை என்னும் அடியே சான்றாக உள்ளது. வேறு எந்தக் குறிப்பும் இல்லை.

இனி, இங்குக் கூறிய அறம் திருக்குறளைக் குறித்ததா அல்லது ‘அறம்’ என்ற பெயரில் இருந்திருந்த வேறு ஒரு நூலைக் குறித்ததா என்று நாம் ஆராய வேண்டுவதில்லை. - -

அது கூறிய அறம் திருக்குறளைக் குறிப்பதாகவே கொண்டாலும், அதில் கூறப்பெறும் அறக்கேடுகளைத் திருக்குறள் எவ்விடத்தும் கூறவில்லை என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

அதில் கூறியுள்ள அவ் வறக்கேடுகளுள் முதலாவது கூறப் பெறும்

கொடுமை எப்படி நிகழக் கூடியது என்பதும் தெரியவில்லை. உண்ணும்

பொருட்டு என்றாலும் மாட்டையே அறுப்பார்களே தவிர, பால்மடியை