பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அ-2-8 நடுவு நிலைமை - 12

பின்னாகக் கூறும் முரணாம் என்க.

நடுவுநிலைமை தவறுவதால் இறுதி வருமேயன்றி, இறுதி வரும் காலத்தே நடுவுநிலை தவறுதல் நேரும் என்பது இயங்கியலுக்கு மாறுபட்டதாம் என்க.

5. கேட்டினும் பெருக்கத்தினும் நடுவுநிலை தவறாது இருப்பவரின் மேன்மையை முந்தைய பாடலில் கூறியவர், இதில், அவ்வாறு தவறாது இருப்பதற்கான உத்தி கூறப்பெற்றதால், அதன் பின்னர் இதை வைத்தார்.

ககன். கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. - 117

பொருள்கோள் முறை : -

நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு உலகம் கெடுவாக வையாது.

பொழிப்புரை நடுவுநிலை பேணிப் பொதுமையறத்தின் கண்ணே நின்றவன், யாதாம் ஒருவகையில் தாழ்ச்சியுற்றாலும், அத் தாழ்ச்சியை உயர்ந்தவர்கள் கேடாகக் கருதி இகழ மாட்டார்கள்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. இது, நடுவுநிலை பேணிப் பொதுமையறத்தின் கண் நின்றவன்,

வேளை தாழ்ச்சியுற்றாலும், அதனைச் சான்றோர் இகழ்ந்துரைக்க மாட்டார்கள். பெருமையாகவே கருதுவர், என்று அன்னாரை ஊக்கி

உரைத்ததாகும்.

இக்கருத்தை, ஒப்புரவறிதல் (சமநிலை உணர்தல்) என்னும் அதிகாரத்தினும், -

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் - விற்றுக்கோள் தக்கது உடைத்து - 220 w என்று இன்னும் சிறப்பித்துக் கூறுவார். 2. நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவுநிலை பேணிப்

பொதுமையறத்தின்வழி நின்றவன். ஏதோ ஒருவகையில், தாழ்நிலையைப்

பெற்றாலும், அத் தாழ்வினை. . - -

- நன்றிக் கண் என்றது எல்லார்க்கும் நன்மை கருதும் நோக்கத்தில்

பொதுமை பேணுதல் வழி. -

கண் இடப்பொருள்தரும். அவ்வறத்தின் இடமாக, வழியாக