பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

அ-2-18 ஒப்புரவறிதல் 22



- அவர்களின் செயல் மற்றவர்களின் செயற்பாடுகளை விட மிக்குயர்ந்தனவாக விருப்பதால், அவ்வாறு உள்ளவர்களையே, ஆசிரியர் பெருமான் உயிர் வாழ்கிறார் என்று பெருமைப்படுத்திச் சிறப்பித்துக் கூறுகிறார், என்க.

- இனி, 'ஒத்தது அறிவான் வாழ்வான்’ என்று கூறாது, உயிர் வாழ்வான்'என்று கூறியது, உயிரின் சிறப்பியல்பான சமநிலைப் பொதுமை யுணர்வை மேம்படுத்தும் அவ்வுயிர் தன்னளவில் வளர்த்துக் கொண்ட மீமிசை மாந்தத்தன்மை(Super Manism) யைச் சுட்டிக் காட்டுதற்காம் என்க.

2) மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்: அவ்வாறு அல்லாதவன் இறந்து போனவனாகவே கருதப்படுவான்.

- 'மற்றையான்' என்றது. அவ்வாறல்லாத மற்றையனைவரையும் குறித்தது என்க.

- மற்றுப் பொதுவாக உயிரோடிருப்பவன்.

செத்தாருள் வைக்கப்படும். (அவ்வாறுள்ளவன்) இறந்துபோனவனாகவே கருதப்படுவான்.

- அஃதாவது, அவனை நடைப்பிணம் என்று இழிவு படுத்திக் கூறுவார்.

- இனி, 'வைக்கப்படுவான்' என்று கூறாது, 'படும்' என்றது, பிணத்தை என்று குறிப்புக் காட்டியது.

- வைக்கப்படும் வைத்து எண்ணப்படும்.

- இனி, இதுபோல், இறந்துபோனவராகக் கருதப்படுபவரையும் இரண்டோர் இடங்களில் அவர் சுட்டியிருப்பதும் இங்குக் கவனிக்கத் தக்கது.

'விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரின்
தீமை புரிந்தொழுகு வார்' - 143

‘இசையொழிய வாழ்வாரே வாழாதவர்’ - 240

'இறந்தார் இறந்தார் அனையர் சினத்தை’ - 310

‘உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தி வாழ்க்கை யவர்’ - 330

‘வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணா
செத்தான் செயக்கிடந்தது இல்’ - 1001

- இங்குக் கூறப்பெற்ற கருத்துகளுள்,