பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

அ-2-18 ஒப்புரவறிதல் 22‘மல்கு திரைய கடற்கோட்(டு) இருப்பினும்
வல்லூற்(று) உவரில் கிணற்றின்கீழ்ச் சென்றுண்பார் - நாலடி:263:1-2

- என்று இயைபு கூறினார், பிறரும்.

3) இதில், செய்யாது அமைகலா வாறு என்று நல்கூர்ந்தான் ஆயினும் நயனுடையான் ஏதாவது செய்யவே விரும்பியிருத்தலைக் கூறியதால், இடனில் பருவத்தை யடுத்திஃது இடங்கொண்டது.


உஉ0. ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க(து) உடைத்து. - 220

பொருள்கோள் முறை: இயல்பு

பொழிப்புரை: பொதுமையறம் செய்வதால் ஒருவனுக்குப் பொருள் கேடோ அல்லது தாழ்ச்சியோ வருமென்றால், அது தன்னை விற்றுக் கொண்டாயினும் பெற்றுக் கொள்ளும் தகுதி உடையது.

சில விளக்கக் குறிப்புகள்:

1) ஒப்புரவினால் வரும் கேடெனின்: பொதுமையறம் செய்வதால் ஒருவனுக்குப் பொருள்கேடோ அல்லது தாழ்ச்சியோ வருமென்றால்,

- பொதுமையறம் என்னும் ஒப்புரவாண்மையைக் கடைப் பிடித்தொழுகும் ஒருவனுக்கு

வரும் கேடு எனின் : வரும் கேடுகளாகிய பொருள். இன்மை அல்லது தாழ்ச்சியோ ஏற்படின்.

- எல்லார்க்கும் கொடுத்து உதவுகின்ற தன்மையால் ஒருவனுக்கு இருக்கின்ற பொருள் வளம் குறைவு படலாம்.

- அல்லது தன் குடும்ப நலன்கள் தாக்கம் பெறலாம்.

- அத்தகைய தாழ்ச்சிகள் ஏற்படுவது உலக இயல்பாம்.

அவ்வாறு ஏற்படின் அது தாழ்ச்சியில்லை; அதை நாமே விலை கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம் என்பார் ஆசிரியர்.

2) அஃதொருவன் விற்றுக் கோள் தக்கது உடைத்து:

அது தன்னை விற்றுக் கொண்டாயினும், பெற்றுக் கொள்ளும் தகுதி உடையது.